பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமபக்தன் 139

"கடையிலா மறையின் கண்ணும் ஆரணம் காட்ட மாட்டா

அறிவினுக்கு அறிவும் அன்னோன் போர்அணங்கு இடங்கர் கவ்வப்

பொதுநின்று முதலே என்ற வாரணம் காக்க வந்தான்

அமரரைக் காக்க வந்தான் (கடை இல்லா - முடிவு இல்லாத மறை - வேதம்: ஆரணம் - உபநிடதம் காட்டமாட்டா - விளக்க மாட்டா; போர் அணங்கு - வருத்தம் செய்கின்ற; இடங்கர் - முதலை; பொது நின்ற முதல் - ஆதிமூலம்; வாரணம் - யானை, கசேந்திரன்) "மூலமும் நடுவும் ஈறும்

இல்லதோர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த

காரணன் கைவில் ஏந்திச் சூலமும் திகிரி சங்கும்

கரகமும் துறந்து தொல்லை ஆலமும் மலரும் வெள்ளிப்

பொருப்பும்விட்டு அயோத்தி வந்தான்' (மூலம் - முதல் மும்மைத்து - இறப்பு: நிகழ்வு, எதிர்வு கணக்கு - எல்லை; காரணன் - முழுமுதற் கடவுள் கரகம் - கமண்டலம், ஆலம் - ஆலிலை மலர் - தாமரை)

    • 24

பாடல்களைப் பன்முறை படித்துப் பாடி அநுபவித்தால் அநுமனின் இராமபக்தி கொடுமுடியை எட்டும். முதற்போர் நடைபெற்ற பொழுது ஒருநிலையில் அநுமன் தோளின்மீது இராமன் ஏறிப் போர் புரிகின்றான். அதனைக் கண்ட தேவர்கள் குன்றின்மீதுள்ள சிங்கம் என்று கூறி மகிழ்கின்றனர். "ஈன்ற கன்று தாங்கிய தாய் என மாருதி களித்தான்." " இராமபக்தியில் திளைக்கும் கம்பன், இக்காட்சியை,

24. சுந்தர. பிணிவிட்டு - 79 25. சுந்தர. பிணிவீட்டு - 80 26. யுத்த முதற்போர் - 219

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/140&oldid=1361317" இலிருந்து மீள்விக்கப்பட்டது