பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. குணக்குன்றன்

"குணம் என்னும் குன்றேறி நின்றார்' என்று வள்ளுவர் பெருமான் முனிவர்களைக் குறிப்பிடுவர். அந்த அரும் பெருந்தொடரை அதுமனைக் குறிப்பிடவும் பயன்படுத்த லாம் என்பது அடியேனின் கருத்து. இராமகாதையைக் கவனத்துடன் படிப்போர், அதுமன் என்ற கதை மாந்தன் தன் அரும்பெருங்குணங்களால் படிப்போர் மனத்தினைக் கவர்கின்றான் என்று சொல்லுவது மிகையன்று; உண்மை உரையேயாகும். இத்தகைய கதை மாந்தனைக் கம்பன் எடுத்த எடுப்பில்,

"தன்பெருங் குணத்தால் தன்னைத்

தானலாது ஒப்பிலாதான்'

என்று பாராட்டுவதைக் கண்டு மகிழலாம். முதன் முதலில் இராமலக்குமணர் அதுமனைச் சந்தித்துப் பேச்சுக் கொடுத்த சிறிது நேரத்திலேயே, இராமபிரான் "இசைசுமந்து எழுந்த தோளுடைய” அதுமனை எடைபோட்டுவிடுகின்றான். தேற்றமுற்று இவனினுங்குச் செவ்வியோர் இன்மை தேறித் தம்பியிடம் கூறுகின்றான்.

"ஆற்றலும் நிறைவும் கல்வி

அமைதியும் அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்ல


என்று வீரம், சற்குணநிறைவு, கல்வி அமைதி, ஞானம் என்ற வேற்றுமை இவனிடம் காணப்பெறவில்லை என்று குறிப்பால் உறுதி செய்வதைக் கண்டு மகிழ்கின்றோம்; வியக்கின்றோம்.

1. குறள் - 29

2. கிட்கிந்தை - அதுமப் - 11 3. கிட்கித்தை - அதுமப் - 18 4. கிட்கிந்தை - அதுமப் - 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/144&oldid=1361329" இலிருந்து மீள்விக்கப்பட்டது