பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிக்கு நாயகன் 15

வருகின்றவர்கள் அல்லர தளர்கின்ற நிலைமையுடைய வர்கள் என்பதைத் தனது ஞானத்தால் ஆலோசித்து அறிந்து, மலை முழையில் பதுங்கியிருந்த சுக்கிரீவனுக்குத் தேறுதல் கூறுகின்றான். பின்னர், மாணி வடிவத்துடன் இராம லக்குமணர்களை அணுகி, அவர்களுடன் விநயமாகப் பேசியும், மீண்டு வந்து சுக்கிரீவனுடன் தெளிவாகப் பேசியும் இருவர்களிடையும் நேசத்தையும் பாசத்தையும் உண்டாக்கி விடுகின்றான். இஃது அநுமனின் செயற்கருஞ்செயல் ! இதனால் இராமகாதை இனிதாக நடைபெற வழி அமைகின்றது.

(2) இராமலக்குமணர்கள் சுக்கிரீவன் இருப்பிடத்துக்கு எழுந்தருள்கின்றனர், அவன் வேண்டுகோட்கிணங்கி. இராமன் நீராடி விருந்துண்டபின் இனிமையாக இராமனும் சுக்கிரீவனும் அளவளாவுகின்றனர். சுக்கிரீவனுடைய இல்லக் கிழத்தி இராமன் கண்ணில் படவில்லை.

"பொருந்து நன்மனைக் குரிய பூவையைப் பிரிந்து ளாய்கொலோ நீயும்' என்று இராமன் சுக்கிரீவனை அன்பினால் வினவுகின்றான். அதற்கு அநுமன் விடை கூறத் தொடங்கி, "வாலி யென் றுளான் வரம்பி லாற்றலான்” என்ற வாலியின் வரலாற்றைக் கூறுமுகத்தான் இராமன் வினாவுக்கு விடை தருகின்றான். பேச்சின் இறுதியில்,

" உருமை யென்று.இவற்கு

உரிய தாரமாம் அரும ருந்தையும்

அவன்வி ரும்பினான் இருமை யுந்துறந்து

இவன்இ ருந்தனன்" என்று கூற இராமன் வாலியின்மீது சினங்கொள்ளுகின்றான். இராமபிரான் வாலியைக் கொல்வதாகவும் உறுதி கூறுகின்றான்.

3. கிட்கிந்தை - நட்புக்கோள். 35 4. நட்புக்கோள் - 37 - 72 5. நட்புக்கோள் - 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/16&oldid=1509140" இலிருந்து மீள்விக்கப்பட்டது