பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36 அண்ணல் அநுமன்

தொடர்ந்து, "ஐயனே, உங்கட்கும் எங்கட்கும் நட்பு உண்டாகும்படி செய்தது என் செயலன்றோ? அந்த நட்பு அறம் சிதையுமானால், தப்பும் வகை நட்பு ஆனவனாகிய சுக்கிரீவனுக்கும் நட்பைச் செய்வித்தவனான எனக்கும் உண்டோ? இதனால் அறிவெல்லாம் குற்றம் உடைய தாகுமன்றோ? (63).

"எம் பெருமானே, இப்பிறப்பிலும் முப்பிறப்பிலும் நாங்கள் செய்த தவமும், நாங்கள் செய்த நல்லறச் செயல்களும், தேவர்களும், மற்ற எத்திறத்தாரும் நீரே என்பது என்னிடத்தில் பொருந்தி உள்ளது. அது கிடக்கட்டும். மூன்று உலகங்களையும் பாதுகாக்கும ஆற்றல் உடையீர், உங்கட்கு எங்கள்மீது சீற்றம் உண்டாகுமானால், நாங்கள் தப்பி உய்வதற்கு அரண் ஏதாவது உண்டா? தங்கள் அருள் ஒன்றே எங்கட்குக் கதியாக உள்ளது.” (64).

“எங்கள் கவிக்குலத்தரசன் தங்கள் கட்டளையை மறக்கவில்லை. வல்லமையுள்ள சேனைகளை அழைத்து வரும்படி நாற்றிசைகட்கும் ஆள்களை அனுப்பியுள்ளான். அவர்கள் வந்து சேர்தலை எதிர்பார்த்துக்கொண்டிருந்ததால் தாமதம் ஏற்பட்டது. இதுவேயன்றிச் சத்தியத்தினின்று இப்போது தவறுவானேயாகில் அவன் இவ்வுலகில் பிறந்தும் பிறவாதவனேயாவன். இது மட்டிலுமா? அவனுக்கு நரகமும் தப்பாது.” (65),

"வீரர் திலகமே 1 செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும் வானகமும் மாற்ற லரிது’ என்பது அறமே யாயினும், அவ்வுதவி செய்தவருக்காகப் போர்க்களத்துக்குச் சென்று அவன் பகைவரை அழித்தலும், அது இயலாவிடின் அப்பகைவர் கையால் தான் உயிர் மாய்தலும் ஒருவாறு ஈடாகலாம்; இவையன்றி வேறு என்ன உளது?” (66)

"வாணர வீரர்கள் வாயிலை அடைத்துக் குன்றுகளை அடுக்கியது முதலியன உனது சீற்றத்தைக் கண்டு அஞ்சியதனால் நிகழ்ந்த செய்கைகளேயன்றி வேறு அல்ல. இவற்றை நீ இவ்வாறு கருதாமல் உம்மோடு மாறுபட்டுச் செய்தனவாகக்கொண்டு நொதுமலன் போல ஈண்டு நிற்பின்,…………..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/37&oldid=1509386" இலிருந்து மீள்விக்கப்பட்டது