பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்லின் செல்வன் 41

(இரண்டு இரு நிகழ்ச்சிகள், மணி ஆழி - இரத்தினம் பதித்த மோதிரம் ஆன்ற சிறந்த விரகம் - பிரிவினால் உண்டான ஆசை உள் ஊற உள்ளத்தில் மிக ஆறி - தணிந்து)

"வாங்கிய ஆழி தன்னை

வஞ்சரூர் வந்த தாமென்று ஆங்குயர் மழைக்கண் நீரால்

ஆயிரம் கலசம் ஆட்டி ஏங்கினள் இருந்த தல்லால்

இயம்பலள் எய்த்த மேனி வீங்கினள் வியந்த தல்லால்

இமைத்திலள் உயிர்ப்பு விண்டாள்"

(ஆழி - மோதிரம்; வஞ்சர் ஊர் - வஞ்சனை உள்ளவர்களான அரக்கர்களின் நகரம் வந்தது - பரிசுத்தம் இழந்தது; ஆங்கு - அப்பொழுது; ஆயிரம் கலசம் - ஆயிரம் குடம் ஆட்டி - நீராட்டி ஏங்கினள்இரங்கினள் இயம்பிலள் - பேச்சில்லாதவள் எய்த்த இளைத்த வீங்கினள் - பூரித்தாள் இமைத்திலள் - மூடவில்லை; உயிர்ப்பு - பெருமூச்சு விண்டாள் - எறிந்தாள்)

இரண்டும் அற்புதமான சொல்லோவியங்கள். உணர்ச்சி பொங்கி வழிபவை.

அடுத்துத் தான் ஆடையில் முடித்து வைத்திருந்த சூளாமணியைத் தந்தாள்.

"வைத்தபின் துகிலின் வைத்த

மாமணிக்கு அரசை வாங்கிக் கைத்தலத்து இனிதின் ஈந்தாள்”* இங்ங்னம் தந்த சூளாமணியைத் “தாமரைக் கண்கள் ஆர வித்தக காண்டி" என்று கொடுத்தனன். கொடுத்தவர் யார்? சொல்லுகின்றான் கம்பன்:

25. சுந்தர - திருவடி தொழுத, 78 26. சுந்தர - திருவடி தொழுத: - 81……………

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/42&oldid=1509391" இலிருந்து மீள்விக்கப்பட்டது