பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42 அண்ணல் அநுமன்

"வேத நன்னூல் உய்த்துள காலம் எல்லாம்

புகழொடும் ஓங்கி நிற்பான்." என்று அது மனை அறிமுகம் செய்யும் பாங்கில் - 'காலதத்துவம் உள்ள அளவும் கீர்த்தியுடன் சிரஞ்சீவியாய் நிற்பவன் என்ற அளவில் நம் உள்ளத்தில் நிலையாக இடம் பிடித்துக்கொள்கின்றான், அக்கவிக்கு நாயகன்.

(9) போர்க்களத்தில் - விரவாதத்திலும் : இங்கும் அநுமனது சொற்றிறத்தைக் கண்டு மகிழலாம். அநுமன் இந்திரசித்தன் மீது ஒருமலையை எறிய, அதனை அவன் அம்புகளால் தடுத்தும் இருவர்க்கிடையே வீரவாதம் நிகழ்கின்றது.

முதலில் இந்திரசித்தன் பேசுகின்றான், இகழ்ச்சிக் குறிப்புடன்.

"நில்ல டாசிறிது நில்ல டாஉனை

நினைந்து வந்தனென் முனைக்குநான் வில்லெ டாமைதினது ஆண்மை பேசிஉயி ரோடு நின்றுவிளை யாடினாய் கல்ல டாநெடு மரங்க ளோவரு

கருத்தி னேன்வலி கடப்பவோ சொல்ல டாவென'இயம்பி னான்இகல்

அரக்கன் ஐயன்இவை சொல்லினான். (முனைக்கு - போர் முனைக்கு) இதற்கு மறுமாற்றம் உரைக்கும் போக்கில் அநுமன் உரைப்பவை :

3, 26

"வில்லெ டுக்கஉரி யார்கள் வெய்யசில

வீரர் இங்கும்.உளர், மெல்லியோய் ! கல்லெ டுக்கஉரி யானும் நின்றனன்

அதுஇன்று நாளைஇடை காணலாம், எல்லெ டுத்தபடை இந்தி ராதியர்

உனக்கிடைந்து உயிர்கொடு ஏகுவார் புல்லெ டுத்தவர்கள் அல்லம் வேறுசில போர்எ டுத்துளதிர் புகுந்துளேம்'

27. யுத்த - நாகபாசம் - 72 28. யுத்த - நாகபாசம் - 73 29. யுத்த - நாகபாசம் - 74, பாட்டை மீண்டும் மீண்டும் படித்து அநுபவித்து அதுமனின் சொல்லாற்றலைக் காணவேண்டும்…………….

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/43&oldid=1509392" இலிருந்து மீள்விக்கப்பட்டது