பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனைச் செம்மல் 63

தம் நாயகன்மீது ஆணையிட்டுக் கூறிய பிராட்டியும் இராமன் வரக் காணாது உயிரை விட்டிடுதல் உறுதி.

"ஆதலால் அமர்த்தொழில்

அழகிற்று அன்றுஅரும் தூதனாம் தன்மையே

தூய்தென்று உன்னினான்."" என்று கருதியவன் இராவணனின் இருப்பிடத்தைச் சார்ந்தான். ஈண்டும் அதுமனின் சிந்தனை அவனைத் தவறான வழியில் செயற்படாமல் தவிர்ப்பதைக் காணமுடிகின்றது.

இங்ங்னம் மேற்காட்டப்பெற்ற ஐந்து சிந்தனை

களாலும் அநுமன் முறையல்லா முறையில் செயற்படாது தவிர்க்கப்பெறுகின்றான். இவை எண்ணித் துணிக கருமம் என்ற வள்ளுவனின் அறிவொளியையும் காட்டுகின்றன. இவற்றால் காற்றின் மைந்தனை நாம் சிந்தனைச் செம்மல் என்று கருதலாமல்லவா?

39. சுந்தர. பிணிவீட்டு - 54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/64&oldid=1360604" இலிருந்து மீள்விக்கப்பட்டது