பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. விழையும் உருவினன்

அநுமன் அஞ்சனக் கிரியனைய இராமனை ஓர் அந்தன மாணி வடிவங்கொண்டு அணுக எண்ணுகின்றான். சற்று மறைவாக இருந்து இராமலக்குமணர்களை ஆராய்கின்றான்; எண்ணுகின்றான். இவர்களைக் கண்டமாத்திரத்தில்,

"என்பெனக்கு உருகு கின்றது

இவர்கின்றது அளவில் காதல் அன்பினுக்கு அவதி இல்லை

அடைவென்கொல் அறிதல் தேற்றேன் (என்பு - எலும்பு; அவதி - எல்லை; தேற்றேன் - அறிய மாட்டாதவனாயுள்ளேன்)

என்று கருதுகின்றான். ஒருசமயம், காற்றின் வேந்தன் தன் மகன் அதுமனை நோக்கி “நீ திருமாலுக்கு அடிமைசெய்” என்றான். அப்பொழுது மாருதி யான் திருமாலை எங்ங்னம் அறிவது?” என்று வினவ, வாயுதேவன் "எவரைக் கண்ட மாத்திரத்தில் காரணமின்றி உனக்கு அளவற்ற பேரன்பு உண்டாகின்றதோ அவரையே திருமால் என்பதாக அறிக’ என்று சொல்லியிருந்தான். அதனைச் சிந்திக்கின்றான்; மாணியாக உருமாற்றிக்கொண்டது, முதல் உருவ மாற்றம்.

(2) இலக்குவன், தம்மையார் என்ற விளக்கம் தந்த பிறகு அநுமன் இராமன் திருவடிகளில் விழுந்து தண்டன் இடுகின்றான்.

“நின்றஅக் காலின் மைந்தன்

நெடிதுவந்து அடியில் தாழ்ந்தான்"

(கால் - காற்று)

1. கிட்கிந்தை - அதுமப். 15 2. கிட்கிந்தை - அதுமப். 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/65&oldid=1360607" இலிருந்து மீள்விக்கப்பட்டது