பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விழையும் உருவினன் 69

மனத்தைக் கவரவல்லதாக அமைகின்றது. இது நான்காவது பேருருவம்.

(5) சுரசை' நிகழ்ச்சி : அநுமன் இலங்கையை நோக்கி அதிவேகத்துடன் சென்றுகொண்டிருக்கும்பொழுது சுரசை என்பவள் அரக்கி வடிவு கொண்டு அநுமன்முன் தோன்றுகின்றாள். அவனை அதட்டிக் "கொழுப்புப் பொருந்திய குரங்குக் குலத்தில் பிறந்தவனே! கொடிய யமனும் அஞ்சும்படி வாழ்பவனே! எனக்கு ஏற்ற உணவுப் பொருள் நீ" என்று சொல்லிக்கொண்டு, அகன்ற வாயைத் திறந்த நிலையில் தனது தலை ஆகாயத்தை முட்டுமாறு நிற்கின்றாள்; மேலும் பேசுகின்றாள்,"என் யானைப் பசியைத் தீர்க்க நீ என்னை நெருங்கிவிட்டாய். என் வாயினுள் புகுவாயாக நீ தப்பிச் செல்லும் வழி ஆகாயத்தில் வேறு இல்லை" என்று.

அநுமன், 'பெண்ணாகிய நீ பசிப்பிணியால் வருந்துகின்றாய். தேவர்கட்குத் தலைவனாகிய இராமனது கட்டளையை நிறைவேற்றிவிட்டு மீண்டு வந்தால், அப்போது என் உடம்பை உண்பாய்" என்று நட்பு முறையில் சொல்ல, அவள் சிரித்து, "நின்னைத் தின்பேன்" என்று கூறலும், மாருதி, "வல்லவளாயின் அதனைச் செய்” என்று கூறினன். அவள் அதுமனை விழுங்குமாறு வாயைத் திறக்க, அநுமன் மிக்க பேருருவம் கொள்ளுகின்றான். "திக்கு ஆர் அவள் வாய் சிறிதாம் வகை சேணில் நீண்டான்" (70), அநுமன் உடனே சிறிய வடிவம் கொண்டு அவள் வாயினுட் புகுந்து அவள் வாய் மூடுவதற்குள் மீண்டு வந்திடுகின்றான். இங்குக் கொண்டது ஐந்தாவது பேருருவம். இங்கு மிகச்சிறிய வடிவம் கொள்ளுகின்றதையும் காண்கின்றோம்." "புகை புகா வாயிலும் புகுவான்' என்று கவிஞர் பின்னர்க் கூறியதையும் நினைவுகூர்கின்றோம்.

12. சுரசை : அநுமனது ஆற்றலைச் சோதிக்கத் தேவர்களால் அனுப்பப்பெற்ற நாகமாதா. மனத்துய்மை மிக்கவள்.

13. சுத்தர. கடல்தாவு - 65 - 71.

14. சுந்தர. ஊர்தேடு - 140

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/70&oldid=1360616" இலிருந்து மீள்விக்கப்பட்டது