பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 அண்ணல் அநுமன்

பிராட்டியைத் தேடுவதற்குத் தென்திசைக்கு அனுப்பப் பெற்ற வானரக் கூட்டம் மகேந்திர மலையின் அடிவாரத்தில் இருக்கும்போது, சாம்பவான் அதுமனைப் புகழ்ந்து பேசுவதால் சாபவிமோசனப்படி அநுமன் தன் பலத்தை அறிந்துகொள்ளுகின்றான்; கடல் தாண்டிச் செல்ல ஒருப்படுகின்றான். இது முதல் அவனது வீரதீரச் செயல்களைக் காணமுடிகின்றது. சுந்தர காண்டம் தொடங்கி யுத்த காண்டம் இறுதிவரையில் அவனது வீரச்செயல் களைக் காண்கின்றோம்.

1. கடல்தாவும்போது நடைபெறும் மூன்று நிகழ்ச்சி களினால் அநுமனது வீரப் பண்பு வெளிப்படுகின்றது.

(1) அநுமன் காற்றுப் போல விரைந்து தாவிச் செல்லும்போது மைந்நாகம்' என்னும் மலை கடலினின்று எழுந்து, ஆகாயம் பொருந்த எழுந்து வந்தது.

"கைந்நாகம் அந்நாள் கடல்வந்ததொர்

காட்சி தோன்ற மைந்நாகம் என்னும் மலைவானுற

வந்த தன்றே.”3

அம்மலை மேலும் கீழும் வியாபித்து நின்றதைக் கண்ட அநுமன் சிறிதும் அஞ்சாது, முதலில் அதனை இன்னதென்று உணராது ஐயுற்றனன். ஐயுற்றவன் தலைகீழாக விழும்படி அதனைத் தன் மார்பினால் தள்ளிவிட்டு மிக உயரத்தில் செல்லலானான். பிறகு மைந்நாகம் மானிட வடிவம் கொண்டு வந்து விருந்துண்ணும்படி வேண்ட, அதற்கு அநுமன் தக்க சமாதானம் கூறி விடைபெற்றுச் சென்றான்'

2. மைந்நாகம் : இந்திரன் மலைகளின் சிறகுகளை அரிந்த காலத்தில் இம்மலை வாயு தேவனின் உதவியினால் கடலில் சேர்க்கப்பெற்றது. வருணன் அதனைக் காத்து வந்தான். இராம தூதனும் காற்றின் மைந்தனுமாகிய அதுமனுக்கு ஏதேனும் உதவி புரியுமாறு வருணனால் அனுப்பப்பெற்றது, இம்மலை.

3. சுந்தர. கடல்தாவு - 39

4. சுந்தர. கடல்தாவு - 5.2

5. சுந்தர. கடல்தாவு - 61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/81&oldid=1360633" இலிருந்து மீள்விக்கப்பட்டது