பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 அண்ணல் அநுமன்

(புழை துவாரம், விக்காது - விக்கல் எடுக்காமல்) அநுமனும் எல்லாத் திசைகளிலும் பரவிய அவளது வாய் சிறிதாகுமாறு ஆகாயத்தில் நீண்டு வளர்ந்தான். நீண்டு வளர்ந்தவன் உடனே தனது உடலைச் சுருக்கிக்கொண்டு, அவளது அகன்ற வாயினுட்புகுந்து, அவள் ஒருமுறை மூச்சு விடுவதற்கு முன்னமே அதிவிரைவாக வெளிவந்து விட்டான்." அதுகண்டு தேவர்கள் வியந்தனர். 'இராவண வதம் இவன் உதவியால் இனிதே முடிந்துவிடும்" என உறுதிகொண்டு அவனை வாழ்த்தினர். சுரசையும் உண்மை வடிவத்துடன் அதுமனை வாழ்த்திச் செல்ல, அவனும் அவளைப் புகழ்ந்து சென்றான்."

(3) அங்காரதாரை" என்ற அரக்கி ஒருத்தி குறுக்கிடு கின்றாள். அநுமனது பெரிய நிழலைக் கடலிலே கண்டு, நெடுநாளாகவுள்ள தன் பசியைத் தீர்க்கப் போதுமானதாக வுள்ள இரை கிடைத்ததென்று மகிழ்ந்து, அந்நிழலைப் பிடித்துக்கொண்டு அநுமனது செலவைத் தவிர்த்தாள்.

'இங்கார் கடத்திர்'எனை

என்னா எழுந்தாள் அங்கார தாரைபெரிது

ஆலாலம் அன்னாள்


(ஆலாலம் - ஆலகாலவிடம்)

உலக உருண்டைக்கு ஏற்படுத்திய உறை போன்ற பெருந்துவாரமான வாயையுடைய இவள், கடல் நீர் தன் காலைக் கழுவவும், முடி, வான் முகட்டை முட்டவும் நிமிர்ந்து நின்றபோது 'அறத்தையும் அருளையும் அடியோடு

10. சுந்தர. கடல்தாவு - 71

11. சுந்தர. கடல்தாவு - 72

12. அங்காரதாரை : தனக்கு நேரே வானத்தில் செல்லுகின்ற பிராணியின் நிழலைத் தான் பிடித்த மாத்திரத்தில் அப்பிராணி பிடிக்கப்பட்டுவிடும்படியான பேராற்றல் உடையவள். அதனால் சாயாக்கிரகிணி என்ற பெயரையும் கொண்டவள். ஸிம்ஹிகை என்ற மற்றொரு பெயரும் இவளுக்கு உண்டு. அங்காரதாரை - தணலின் கொழுந்து போலக் கொடியவள் என்று பொருள்படும் வடசொற்றொடர்.

13. சுந்தர. கடல்தாவு. 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/83&oldid=1360636" இலிருந்து மீள்விக்கப்பட்டது