பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஞ்சா நெஞ்சன் 85

கூடிக் கொன்றனன் சிலவரை

கொடிநெடு மரத்தால் சாடிக் கொன்றனன் சிலவரை, பிணந்தொறும் தடவித் தேடிக் கொன்றனன் சிலவரை,

கறங்குஎனத் திரிவான்."" (கறங்கு - காற்றாடி) சிலரைப் பம்பரம் போல் சுழலும்படி விட்டெறி கின்றான். மேலும் பலரைப் பாழ்படுத்தியதை,

"கரத லத்தினும் காலினும்

வாலினும் கதுவ நிரைம ணித்தலை நெரிந்துஉகச்

சாய்ந்துஉயிர் நீப்பார் சுரர்ந டுக்குற அமுதுகொண்டு எழுந்தநாள் தொடரும் உரகர் ஒத்தனர் அநுமனும்

கலுழனே ஒத்தான்."" (கரதலம் - கை கதுவ பற்ற சுரர் - தேவர்கள் உரகர் - சர்ப்பசாதியார், கலுழன் - கருடன்) என்ற பாடலால் அறியலாம். நந்தவனத்து நாயகர்கள் இச்செய்தியை இராவணனிடம் தெரிவிக்கின்றனர். அநுமனது பராக்கிரமத்தை ஈண்டும் காண முடிகின்றது.

16. கந்தர. கிங்கரர் வதை - 36

17. கிங்கரர் வதை - 48. கருடன் தனது தாயான வித்தையின் அடிமைத்தன்மையை ஒழிக்கக் கருதித் தேவர்களுடன் பொருது வென்று, அந்தத் தேவலோகத்திலிருந்த அமிருதத்தை எடுத்து வர முயலுகையில் அதற்குக் காவலாய் உள்ளவரும் திருட்டிவிட முள்ளவரும், நெருப்புப்பொறி பறக்கின்ற கண்களையுடையவரும், பெருவலிமை படைத்தவரும், மிகக் கொடியவரும், கண்களினாலேயே கட்டு எரிக்க வல்லவருமான இரு உரகர் கண் கொட்டாமல் எதிர்த்து நிற்பது கண்டு, இவர்களை நாம் எவ்வாறு வெல்வது? என்று ஆலோசித்து, தனது இறகுகளினால் அவர்கள் கண்களைப் புழுதி திரம்பும்படி செய்து, அவர்கள் கண் பார்வை தெரியாத சமயத்தில் அவர்களைக் கண்டதுண்டமாக்கிய பிறகு அமிர்தத்தைக் கவர்த்தான். - இந்தச் செய்தி பாரதம் - ஆதிபர்வத்தில் உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/86&oldid=1360796" இலிருந்து மீள்விக்கப்பட்டது