பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 அண்ணல் அநுமன்

பன்னிராயிரம் அரக்க குமாரர்கள் தேரின்மீது ஏறிக் கொண்டு அவனுக்குத் துணையாகச் சென்றனர். அந்நிலையை மாருதி காண்கின்றான். "காற்றின் சேய் வரவு கண்டான்', அக்ககுமாரன், "நம்முடைய ஊரில் போந்து, சோலையை முரித்து அழித்து, அம்மட்டோடு நில்லாமல் மிகப்பல அரக்கரையும் அழித்து, நமக்கும் பேரவமானத்தை யும் உண்டாக்கியதனால் இக்குரங்கைக் கொல்வதுடன் நில்லாமல், மூவுலகிலும் தேடித் தேடிச் சென்று குரங்குச் சாதியைக் கருவோடு அழித்து, இம்மூவுலகிலும் குரங்கு என்ற பேரே இல்லாமல் செய்துவிடுவேன்' என்று தன் சாரதியிடம் சூளுரைக்கின்றான்.

கடுமையான போர் நிகழ்கின்றது. அரக்கர் சேனை அழிந்துபடுகின்றது. இறுதியில் அக்ககுமாரனுக்கும் அநுமனுக்கும் போர் நிகழ்கின்றது. தனியாக அக்ககுமாரன் தன் ஒற்றைத் தேரில் வந்து அதுமனை எதிர்க்கின்றான்." அரக்கன் எய்த அம்புகளையெல்லாம் அநுமன் தன் கையிலுள்ள இரும்புத்தண்டினாலே விலக்கி அழிக் கின்றான்'

பின்னர், அவன் தேரின்மீது பாய்ந்து சாரதியின் உயிரை ஒழிக்கின்றான். தேரையும் தன் கைகளால் நொறுக்கிச் சின்னபின்னப்படுத்துகிறான். நேராக அவனை அணுகி, அவன் வில்லைப் பிடித்துக்கொள்ளுகின்றான். இருவரும் மாறிமாறி வில்லை இழுக்க அது முரிந்து அழிகின்றது. பிறகு, அரக்கன் வாளினால் பொருகின்றான்; அநுமன் அதனையும் அழித்தொழிக்கிறான். பின் தன் வாலால் அரக்கனைச் சுற்றிப் பிணிக்கின்றான்; அவன்மீது ஏறிக்கொள்கின்றான்; தன் வாலினால் பற்றிக்கொண்ட நிலையில், அநுமன் பற்கள் உதிரும்படி அவன் கன்னத்தில் அறைகின்றான்; பின்னர், பேரொளியையுடைய மின்னற்கூட்டம் மேகத்தினின்று வெளிவந்து விழுவது போல் காதிலணிந்துள்ள

31. சுந்தர. அக்க குமாரன் வதை - 17

32. சுந்தர. அக்க குமாரன் வதை - 23 33. சுந்தர. அக்க குமாரன் வதை - 31 34. சுந்தர. அக்க குமாரன் வதை - 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/91&oldid=1360805" இலிருந்து மீள்விக்கப்பட்டது