பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

107


குழு விளையாட்டுக்கள், குழு பொழுது போக்கு செயல்கள் எல்லாம் இதன் பெருமையை விளக்கும்.

3. கற்றுக் கொள்பவர்களின் ஆர்வத்திற்கேற்பவே, தேவைகளுக்கு ஏற்பவே, உடற்கல்விப் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
4. ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்கவும், தீர்த்துவிடவும் கற்றுக் கொண்டே, கற்கும் பணியானது உடற்கல்வியில் தொடருகிறது.
5. உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உற்சாகமும் உத்வேகமும் ஊட்டுபவர்களாக இருக்கின்றார்கள்.
6. எப்பொழுதும் நிலையாக இருக்கின்ற பாடத்திட்டங்களை உருவாக்காமல், நிலைமைக் கேற்ப நெகிழ்ந்து கொடுக்கும் திட்டங்களுடன், உடற்கல்வி மாணவர்களுக்குக் கற்பிக்கிறது.

இக்கருத்துக்கள் மூலமாக உடற்கல்வியின் மேன்மை நன்கு புரிகிறதல்லவா!

4. இயற்கைத் தத்துவம் (Naturalism)

மேற்கத்திய உலக நாடுகளில், மிகவும் பழமையான ஒன்றாக, இயற்கைத் தத்துவம் இருந்திருக்கிறது. முன்னர் விளக்கிய மூன்று தத்துவங்களைப் போலவே, இதுவும் முக்கியமான தத்துவமாகும்.

உலகில் உள்ள இயற்கையாக உருவான பொருட்கள். வடிவமைப்பு வாய்ந்தவைகள் மட்டுமே மதிப்புமிக்கவை என்பது தான் இந்த இயற்கைத் தத்துவத்தின் கொள்கையாகும்.

இனி அதன் முக்கியக் குறிப்புக்களைக் காணுவோம்.