பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

115




டார்வின் தந்த விளக்கம்

உயிரியல் கொள்கை பற்றி, டார்வின் தந்த விளக்கம், மனித உடல்களைப் பற்றி மேலும் மேலும் ஆராய்ந்தறிய, விஞ்ஞானிகளுக்கு அதிக ஊக்கத்தை அளித்தது.

டார்வின் ஆய்ந்த ஆய்வும், கண்டுபிடித்த உண்மைகளும், உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விவரித்தன. அவற்றில் மனித இனம் பெற்றிருக்கின்ற வளர்ச்சி, மிகுந்த மேன்மையுடையது ‘என்பதாக அவரது ஆராய்ச்சி’ தெளிவுபடுத்தியது.

பரிணாம வளர்ச்சித் தத்துவம் பற்றி டார்வின் கொண்டிருந்த கருத்துக்களும், கருதுகோள்களும் (Hypotheses) மனித இனத்தின் மாண்புமிகு வளர்ச்சித் தத்துவத்தை வெகுவாக விளக்கிக்காட்டின.

பரிணாம வளர்ச்சித் தத்துவம் பற்றி டார்வின் கொண்டிருந்த கருத்துக்களும், கருதுகோள்களும் (Hypotheses) மனித இனத்தின் மாண்புமிகு வளர்ச்சித் தத்துவத்தை வெகுவாக விளக்கிக் காட்டின.

பரிணாம வளர்ச்சியில், உயிரினங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாற்றம் பெற்றுக் கொண்டே வந்தன. அவ்வாறு மாற்றம் பெறுகிறபோது, தங்களுடைய குணாதிசயங்களில் சிலவற்றை இழந்து, புதிய உருவம் பெறும்போது, அதற்குண்டான குண நலன்களைப் பெற்றுக் கொண்டன என்பது டார்வின் கூறிய குறிப்புக்களாகும்.

அவ்வாறு மாறியவைகளில் ஒரு சில முக்கியமான உறுப்புக்களும் இருந்தன. தேகத்தில் முளைத்திருந்த முடி, நுகரும் ஆற்றலில் இருந்த திறமை கூரான பற்கள்,