பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

உடற்கல்வி என்றால் என்ன?


 விருப்பத்திற்கு உட்பட்டவை வெளிப்புற உந்துதல்களுக்கு ஏற்ப நடைபெறுபவை, நினைத்தால் நிறுத்திவிட முடிந்தவை.

உயிர்வாழும் இயக்கங்களில் ஈடுபட்டிருக்கிற முக்கியமான உறுப்புக்கள் யாவும், வளர்த்துவிடும் பயிற்சிகளினால் பெரிதாக வளர்ந்துவிடுவதில்லை, ஒட்டம், தாண்டல், எறிதல் போன்ற பயிற்சிகளைச் செய்யும்போது, உள்ளுறுப்புக்கள் தங்கள் வடிவில் பெரிதாக மாறாமல், வலிமையில் வளர்ந்து கொள்கின்றன.

இதனால், உடல் உறுதியாக இருப்பதுடன், உன்னதமான வலிமையுடன் விளங்கி, ஒப்பற்ற வாழ்வு வாழ வைக்கின்றது.

எப்படிஎன்றால்,இயக்கங்களுக்கு செயலில் வலிமையும் செழிப்பும்கொடுத்து, உறுப்புக்களை வளர்த்து செழுமைபெறக்கூடிய முழுமையான உதவிகளையும் வளர்த்துவிடும் இயக்கங்கள் வழங்குகின்றன.

உடற்பயிற்சியும் உடல் வளர்ச்சியும்

உடல் வளர்ச்சி என்றதும் என்ன என்று ஒரு வினா எழும்புவது இயற்கையே.

வளர்ச்சி என்றால் பெரிதான வளர்ச்சி (Bigger) என்றும், நுண்மையான வளர்ச்சி (Advancement) என்றும் நாம் பிரிக்கலாம்.

உருவில் பெரிதாகவும், எடையில் கனமானதாகவும் உறுப்புக்கள் வளர்வதை வளர்ச்சி என்று நாம் கூறலாம். தசைகள் பெரிதாக வளர்வது, எலும்புகள் கனமாக வளர்வது என்பது இதற்குச் சான்றாகும். இதை எடை போட்டும் சுற்றளவை அளந்தும் கண்டறியலாம்.