பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

121


உடல் உயரமாக வளர்வது, எடை அதிகரிப்பது,விரிவடைவது உதாரணமாகும்.

நுண்மையான வளர்ச்சி என்பது உறுப்புக்கள் தங்கள் அளவில் அப்படியே அமைந்திருந்து, ஆற்றலில் வளர்ந்து, செயல்முறைகளில் தேர்ந்து செய்யும் பணியில் ஓர் செப்பமான நிலையை உறுப்புக்கள் பெறுவதாகும்.

எலும்புகள் வளர்கின்றன. பெரிதாக வளர்கின்றன. அப்படி வளரும்பொழுதே, எலும்புகளின் உள்ளே ஏற்படும் முக்கிய இரசாயன மாற்றங்களிலும் இன்னும் நுண்மையான செயல்கள் ஏற்படுகின்றன. அதுதான் நுண்மையான வளர்ச்சியாகும.

உடல் வளர்ச்சியும் மூளை வளர்ச்சியும்:

உடல் உறுப்புக்கள் வளர்ந்து கொண்டே வருகின்றன. ஒரு காலக்கட்டத்தில் வளர்ச்சி போதுமென்று, உறுப்புக்கள் வளர்ச்சியை நிறுத்தி விடுகின்றன. அதனை உடல் வளர்ச்சி என்கிறோம். அதையே பூரண வளர்ச்சி (Maturity) என்றும் கூறுகிறோம்.

ஆனால், உடலும் உறுப்புக்களும், இதுநாள் வரை கற்றுக்கொண்டு வந்த திறன்களையும் (skills), பழக்க வழக்கங்களையும் (Habits) உடனே நிறுத்திவிடுவதில்லை. அவை ஆரவாரத்துடன் தொடர்ந்தும் மேலும் வளர்ந்தும் வருகின்றன.

உடற்பயிற்சியால் உடல் வளர்ச்சியில் திறமைகள் பெருகுவதை நாம் நன்கு அறிவோம்.

அதேபோல் மூளை வளர்ச்சியாலும் அறிவும் ஆழ்ந்த ஞானமும் வளர்ந்து கொண்டே வருகிறது.