பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

135


சோம்களையும், ஒவம் (Ovum) என்பது அதே போல 23 குரோமோசோம்களையும் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு குரோமோசோமும் நிறைந்த எண்ணிக்கையில் ஜீன்ஸ் (Genes) எனும் முக்கிய பொருளைக் கொண்டிருக்கிறது. இந்த ஜீன்களே பரம்பரைக் குணங்களை ஏந்திக் கொண்டு வருகிற வல்லமையைக் கொண்டிருக்கின்றன. இந்த கூட்டுறவாடலில் ஏற்படுகின்ற சிறப்பான கூட்டு அமைப்பைப் பொறுத்தே, தனிப்பட்ட ஒருவரின் பரம்பரைக்குணங்கள் உருவாகின்றன.

உதாரணத்திற்கு ஒரு கருத்தை இங்கே ஆராய்ந்து பார்ப்போம்.

ஒரு விளையாட்டு வீரன் இயற்கையாகப் பிறக்கிறான் (Born) என்பார்கள் சில வல்லுநர்கள். ஒரு விளையாட்டு வீரன் உருவாக்கப்படுகிறான். (Made) என்பார்கள் சில வல்லுநர்கள்.

விளையாட்டு வீரன் ஒருவன் பிறக்கிறான் என்கிற போது, அவன் முன்னோர்களின் பாரம்பரியப் பண்புகள் இவனிடம் முகிழ்த்துக் கிடக்கின்றன. அந்தப் பாரம்பரிய குணங்களும் திறமைகளும் (Talents) அவனை தேர்ச்சி பெற்றவனாக ஆக்கிவிடுகின்றன என்கிற குறிப்பையே வல்லுநர்கள் நிலை நாட்டுகின்றார்கள்.

ஆகவே, அறிஞர்கள் பல இனங்கள் (Races) பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினர். நீக்ரோ இனத்தில் தோன்றிய வீரர்களை வெல்ல மற்ற இனத்தவர்களால் முடியவில்லை என்ற சரித்திரச் சான்றுகளைக் காண்கிற போது,அந்த இனத்தின் பாரம்பரிய குணாதிசயங்கள்தாம். அளப்பறிய ஆற்றலை அளித்து, அகில உலகிலேயே