பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

149


செயல்களில் மெதுவாக இயங்கும் தன்மையே மிகுந்து இருக்கும். பிரதிசெயலில் (Reaction) வேகம் இருக்காது.

ஒரு காரியம் செய்ய பெரு முயற்சி எடுத்துக் கொண்டு விட்டால், அந்தக் காரியம் முடிந்த பிறகு, அந்தக் களைப்பிலிருந்து அவர்கள் விடுபட்டு, புது சக்தியுடன் வெளிவர, அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். அதன் காரணமாக, அவர்கள் மூளைக்கு அதிகமாக வேலை கொடுத்து, வருகிற பிரச்சினைகளை முடித்துக் கொள்வதில், முனைப்பு காட்டுவார்கள். தங்களுடைய தேகசக்தியை அநாவசியமாக செலவு செய்வதில் சிரத்தை காட்டமாட்டார்கள்.

இப்பிரிவினர் எதற்கெடுத்தாலும், விரைவில் உணர்ச்சி வசப்படுகின்றவர்களாகவும், அதிசீக்கிரம் குழந்தைகள் போல ஆத்திரமடையும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களை உளநூல் அறிஞர்கள் தன்னுலக சிந்தனையாளர்கள் (Introverts) என்று அழைப்பார்கள்.

இவர்கள் தங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டும் தங்களது எண்ணங்களையும், உணர்வுகளையும் தாங்களே எடைபோட்டுக்கொண்டு சிந்திப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்களுக்கு நிறைய ஆசைக் கனவுகளும் இலட்சியங்களும் உண்டு என்றாலும் அவற்றை அடைந்திட தங்களுக்குப் போதிய தகுதியில்லை என்கிற தாழ்வு மனப்பான்மையையும் வளர்த்துக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் உடலில் சதைப்பற்று அதிகமில்லாதிருக்கும் தங்களுக்கேற்ற தொழிலைத் தேர்ந்தெடுத்து,அதன் வழி செல்லும் ஆற்றல் உள்ளவர்கள், கூடைப்