பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

உடற்கல்வி என்றால் என்ன?


 பெற்றிருக்கின்றன. இவை எப்படி செயல்படுகின்றன என்பதை ஒர் உதாரணம் மூலமாகக் காண்போம்.

நமது கையின் மேற்புறத் தசையை (புஜம்) யும் என்பார்கள் (upperhand). அது இருதலைத் தசை (Biceps) முத்தலைத்தசை (Triceps) என்று இருவகையாகப் பிரித்து செயல்படுகிறது. இதன் இணக்கமான பணி என்பது இருதலைத் தசை சுருங்கும்போது, முத்தலைத் தசை விரிந்து, அந்த இயக்கத்திற்கு ஒத்துழைப்புத் தருகிறது. இப்படியாக மாறி மாறி சுருங்கியும் விரியும்போதுதான், புஜத்தின் சீரான இயக்கம் சிறப்பானதாக அமைகிறது.

இப்படி ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுத்து இயங்காவிடில், உடல் இயக்கம் ஒரு தன்மையில் அமை யாது. சீரான செயல்பாடுகளும் நடவாது. எப்படியோ இயங்கினாலும் அந்தந்தத்தசைகள் தங்களுக்குரிய பழைய இடத்திற்கும் வந்து சேராது. உடலியக்கமே உதவாத இயக்கமாக மாறிப் போய்விடும்.

ஆரம்ப காலத்தில் குழந்தைகளின் இயக்கங்களில் குழப்பமும் தடுமாற்றமும் இருப்பதை நீங்கள் கவனித் திருப்பீர்கள். அவர்கள் நடையின், ஒட்டத்தில், தாண்ட லில், குதித்தலில் ஒழுங்கின்மைநிறைய இருக்கும்.காரணம், அவர்களது தசைகளுக்கிடையே சரியான கூட்டுறவு செயல்பாடுகள் இல்லாததுதான்.

செயல்படும் தசைகளும், எதிர் செயல்படும் தசை களும் ஒன்றுக்கொன்ற சேராது, சேர்ந்து செயல்படும் முறைகளைக் கற்றுக் கொள்ளாது இருப்பதால் தான், அவர்கள் செயல்கள் அவ்வாறு இருக்கின்றன. திரும்பத் திரும்ப அந்தத் திறமைகளைச் செய்து கொண்டே