பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

உடற்கல்வி என்றால் என்ன?


 அளப்பறிய ஆற்றல்களை வெளிக் கொணரவும் மேற்கொள்கின்ற முயற்சிகளாகும். வாழ்கின்ற காலம் வரை வளமாக நலமாக வாழ்விக்கும் இலட்சியப் பணிகளாகும்.

அந்த இன்பகரமான இலட்சிய வாழ்வை உடற்பயிற்சிகள் எப்படி உண்டாக்கி உதவுகின்றன என்று காண்போம்.

1. உடலின் அடிப்படை ஆதார சக்தியாய் விளங்குவன செல்கள் அந்த செல்கள் வளர்ச்சி பெற, வளர்ந்து வளர, (Metobolism) இளமையைக் காத்து வலிமை பெற, உடற்பயிற்சிகள் உதவுகின்றன.

2. இதயத்தின் அளவில் பெருக்கவும், வலிமையில் மிகுதிபெறவும் செய்கிறது. அதன் மூலம், உடலுக்கு அதிகமான இரத்தத்தை இறைத்து விடுகின்ற ஆற்றலை வளர்த்து விடுகிறது. இதனை விஞ்ஞானிகள் சிறப்பாக வெளிப்படுத்திக் காட்டுகின்றனர்.

இதயம் ஒரு முறை துடித்து இரத்தத்தை இறைக்கும் பொழுது 2 அவுன்சு இரத்தம் வெளியாகிறது. இப்படியாக, ஒரு மணிநேரத்திற்குள், இதயம் இறைக்கும் இரத்தத்தின் அளவு 341 லிட்டராகும். அதாவது 75 கேலன்கள் ஆகும்.

இதே இதயம், உடற்பயிற்சி செய்கிற போது, ஓட்டத்தின்போது, ஒரு மணி நேரத்திற்குள்ளாக 2273 லிட்டர் இரத்தத்தை இறைக்கிறது. அதாவது 500 கேலன்கள் என்பது, உடற்பயிற்சி தருகிற உத்வேகத்தை அல்லவா காட்டுகிறது.

3. உடற்பயிற்சி செய்யாதவர்களை விட, செய்பவர்களுக்கு நாடித்துடிப்பு சீராகவும் இருக்