பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

உடற்கல்வி என்றால் என்ன?


ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், அதில் ஏற்படுகிற கற்றலும் கல்வியும் நிறைவு பெறுகிற இந்த நிறைவான செயல்கள் விளைய, தயார் நிலைவிதி, பயிற்சி விதி, திருப்தி விதிகள் துணை நிற்கின்றன.

உடற்கல்வித் துறையில் இந்த மூன்று விதிகளும் முழுமையாகச் செயல்படுகின்றன. பயிற்சியே செயல்களைப் பக்குவப்படுத்துகின்றன. ஒருங்கிணைந்த செயல் முறை, இதமான இயக்கங்கள், குறைந்த அளவு சக்தியால் நிறைந்த பணியாற்றல், அதிகத்திறன், சிறந்த செயல் சாதனையெல்லாம், உடற்கல்வித்துறை தரும் தொடர்ந்த பயிற்சிகள் மூலம் பங்கு பெறுவோரிடையே எதிர் பார்க்கலாம்.

‘செய்து கொண்டே கற்றுக் கொள்ளுதல்’ என்பது நவீனக் கல்விமுறையின் நனி சிறந்த கொள்கையாகும். இப்படிப்பட்ட செய் முறைகளைக் கொண்டே உடற் கல்வித்துறை சிறப்புப் பெற்றிருக்கிறது என்ற குறிப்பை நாம் என்றும் மறந்துவிடக்கூடாது.

கற்றல் முறைகளில் மேலும் பல விதிகள் இருக்கின்றன.அவ்விதிகள் பற்றி, சுருக்கமாக விளக்குகின்றோம்.

1. தொடர்பு விதி (Law of Continuity)

ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் உள்ள தொடர்பு பற்றி நினைவுபடுத்தித் தூண்டுகின்ற விதி என்று கூறலாம். தாஜ்மகால் என்றதும் அது அமைந்திருக்கின்ற யமுனை ஆற்றங்கரையும் நினைவுக்கு வருகிறதல்லவா!

கண்ணகி என்றதும் காற்சிலம்பும், கம்பன் என்றதும் இராமாயணமும் உடனே நினைவுக்கு வருகிறது. இப்