பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

203


வேறொரு நிலையில் எடுபடுகின்ற துண்டல்களை சமாளித்துக் கொள்ள, அந்தக் கற்றல் அனுபவத் திறன் முழுதாகக் கை கொடுத்துக் காப்பாற்றுகிறது”. அப்படித் தான் ஒரு துறையின் பயிற்சியானது, மற்றொரு துறையில் சமாளிப்பதற்கு சாதகமாகி உதவுகிறது’ என்று கல்விக் களஞ்சியம், இப் பரிமாற்றத்திறன் பற்றி விமர்சிக்கிறது.

அப்படி ஏற்படுகின்ற பரிமாற்றத்தின் அளவானது, தனிப்பட்ட ஒவ்வொருவரின் உள்ளாற்றல், உணர்ந்து கொள்ளும் சக்தி, பெற்ற அனுபவங்களைக் கொண்டு, பேணி வளர்த்துக் கொண்ட பேராற்றல் இவைகளைப் பொறுத்தே அமைகிறது.

இதிலே ஒரு சிறப்புக் குறிப்பு என்னவென்றால், அர்த்த பூர்வமான, அதிசயமான அனுபவங்களே, பரிமாற்றத்திற்கும் பேருதவியாக அமைகின்றன. அநாவசியமான திறன்கள், அர்த்தமற்றவைகளாகப் பயனற்றுப் போகின்றன.

வாழ்க்கையின் சவால்களை சந்திக்க, சமாளிக்க, சாதிக்க, சக்தி மிகுந்த திறன்களின் பரிமாற்றம் மிகவும் உதவிகரமாக விளங்குகின்றன.

இப்படிபிறக்கின்ற பரிமாற்ற சக்தியை,நாம் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம்.

1. நேர்முகப் பரிமாற்றம் (Positive Transfer)

ஒரு விளையாட்டில் பெற்று வளர்த்துக் கொண்டிருக்கிற திறன் நுணுக்கங்கள், அப்படியே அடுத்த விளையாட்டுக்கும் பொருத்தமாக உதவுகின்ற பாங்கினையே நேர்முகப்பரிமாற்றம் என்று கூறுகிறோம்.