பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

உடற்கல்வி என்றால் என்ன?




பூப்பந்தாட்டத்தில் கற்றுக் கொண்ட திறன் நுணுக்கங்கள், திறன்கள் யாவும் டென்னிஸ் விளையாட்டை நன்கு விளையாட உதவும்.

100 மீட்டர் தூர ஓட்டத்தில் பெற்றுக் கொண்டிருக்கும் வேகம், நீளத் தாண்டல் நிகழ்ச்சிக்குப் பொருத்தமாக உதவும். அதுபோல, உயரத் தாண்டும் சக்தியும் திறமையும், கோலுான்றித் தாண்டுவதற்குத் துணையாக அமையும்.

2. எதிர்முகப் பரிமாற்றம் (Negative Transfer)

ஒரு பயிற்சியில் பெறுகிற சக்தியும் திறமையும், மற்றொரு காரியத்திற்குப் பரிமாறும் போது பாதகமான பலன் அளிப்பதையே எதிர்முகப் பரிமாற்றம் என்று கூறுகிறோம்.

அதிக எண்ணிக்கையில் போடுகிற பஸ்கிகளும், தண்டால் பயிற்சிகளும், வேகமாக ஓடுகிற விரைவோட்டத்திற்குத் துணை தராது. மாறாக எதிர் மாறான தாகவே அமைகிறது என்பது நல்ல உதாரணமாகும். இதுபோல் பலமுறைகள் இருப்பதை அறிந்து தெரிந்து கொள்க.

விளையாட்டுத் திறன்களின் பரிமாற்றம்

விளையாட்டுத்திறன்கள் எல்லாம் வாழ்க்கை நிகழ்ச்சிகளை சந்தித்து, வெற்றி பெறக்கூடிய வகைகளில் தான் அமைந்திருக்கின்றன. இத்தகைய பரிமாற்றத்தால் தான் விளையாட்டுக்கள் மனிதர்களது மேம்பாட்டுத் துணைவர்களாக விளங்குகின்றன.

எனவே, நேர்முகத்திறன் பறிமாற்றங்களே வாழ்க்கைக்கு உதவுகின்றனவாக அமைந்திருக்கின்றன. இப்படி