பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

உடற்கல்வி என்றால் என்ன?


இத்தகைய சூழ்நிலைகளிலே, குழந்தைகள் கற்றுக் கொள்கின்றார்கள். கற்றுத் தருகின்றார்கள். பண்புகளைக் கொடுத்து, அன்புகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள். ஒவ்வொருவரும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் நிறையவே கற்றுக் கொள்கின்றார்கள்.

விளையாட்டும் குழந்தைகளும்

விளையாட்டானது குழந்தைகளுள் முடங்கிக் கிடக்கும் மன முதிர்ச்சியை வெளிப்படுத்தி வளர்த்து விடுகின்றது. அத்துடன், சமூக சூழ்நிலைகளுக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்கின்ற அனுபவங்களையும், அறிவுரைகளையும் நிறையவே தருகின்றன.

அவர்கள் ஒருவருக்கொருவர் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அறிவினை வழங்கிக் கொள்கின்றனர். கருத்துப் பரிமாற்றம் காண்கின்றனர். ஒருவருக்கொருவர் புரிந்து கொள்கின்ற பொறுமை திறமையைக் கற்றுக் கொள்கின்றனர்.

விளையாட்டில் கலந்து கொள்ளாத குழந்தைகளுக்கு, வாழ்வு பற்றியே விளங்காமற் போய்விடுவதுண்டு. அவர்களோ முழுமையாக சூழ்நிலைகளுக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்கிற அறிவுக் குறைவு உள்ளவர்களாகவே தடுமாறி வாழ்கின்றார்கள்.

விளையாட்டு வழங்கும் பண்புகள்

(அ) விளையாட்டானது தனித்தன்மையை, சுதந்திர மனப்பாங்கை வளர்க்கிறது.

(ஆ) விளையாட்டானது சமூக வாழ்வு நெறியை வளர்த்து, எந்த நேரத்திலும், சமூகப் பண்பு மாறாத