பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

245


வண்ணம் வாழும் நெறிமுறைகளை வளர்த்து விடுகிறது.

(இ) இது மனதில் விளையும் படபடப்பை, பதைபதைப்பை நீக்கி விடுகிறது.

(ஈ) நட்பு வளர்க்கவும், புகழ் பெறவும், தலைமை தாங்கும் பண்பாளர்களாகவும் மிளிர விளையாட்டு உதவுகிறது.

மேலும், வயதால் வளர வளர, உடலால் பெரியவர்கள் ஆக ஆக, உடற்கல்வி மேலும் பல உதவிகளையும் வசதிகளையும் செய்து கொடுக்கிறது.

மற்றவர்கள் இவர்களை மதிக்கும் வண்ணம் மேம்பாடான இடத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது.

மற்றவர்களையும் மதித்துப் பெருமைப்படுத்துகிற மனப்பாங்கையும் இது வளர்த்து விடுகிறது.

தாங்கள் திறமைகளில் குறைந்தவராக விளங்கினாலும், மற்றவர்களுடன் தங்களையும் ஈடுபடுத்தி, அனுசரித்துப்போகின்ற வண்ணம், சீரான மனப்பான்மையும் மிகுதியாக்கித் தருகிறது.

முனைப்பும் உற்சாகமும் உள்ள மனப்போக்கில்லாமல், மன நோயால், அல்லது மனக்குழப்பத்தால், வாடுகின்றவர்களையும், கூட்டிவந்து குதுகலத்தோடும் வாழுகிற பண்புகளையும் விளையாட்டு வளர்த்து விடுகிறது.

ஆகவே, ஆடுகளங்களில், விளையாட்டு மைதானங்களில் உடற் கல்வியில் பங்கு பெறுகின்றவர்கள் வலிமை, வேகம், நீடித்துழைக்கும் ஆற்றல், ஒருங்கிணைந்த செயல்