பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

உடற்கல்வி என்றால் என்ன?


கள் என்ற ஏதாவது ஒன்றில் அவர்கள் இருந்தாக வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டேவிடுகின்றது.

இருந்தாலும், ஒருவரின் தனிப்பட் குணப்பண்பு (Character) அவரது உள் உணர்விலிருது ஊறி வருகின்ற உயர்ந்த பண்புகளால் தான் உருவாக்கப்படுகிறது.

வீரம், விவேகம், முடிவெடுக்கும் திறம், தன்னடக்கம், சிந்தனைத் திறம், உற்சாகம், நம்பிக்கையூட்டும் செயல் முறைகள், முனைப்பும் முயற்சியும் உள்ள செயல்கள் போன்ற பண்புகள் தாம் தனிப்பட்ட ஒருவரின் தளராத பண்புகளாக அமைந்திருக்கின்றன.

இவைகளில் சிறந்து விளங்குகின்றவர்கள் தாம், சிறந்த குணாளராக சமுதாயத்தில் மேம்பட்டு விளங்குகின்றார்கள் இந்தக் குணங்களே ஒருவரை சிறந்த செயல் வீரர்களாக சிந்தனைச் சிற்பிகளாக எழுச்சியுடன் உருவாக்கி வைக்கின்றன.

இத்தகைய எழுச்சியை உண்டு பண்ணுவது கல்வி தான். சமூகத்தில் சமூகமாக வளரும் குழந்தைகள், சமர்த்தாக சமூகப் பண்புகளைக் கற்றுக் கொள்ள, கல்வியே துணை நிற்கிறது. தோளோடு தோள் நின்று துக்கி விடுகிறது.செழுமையையும் சேர்த்துப் படைக்கிறது.

பள்ளிக்கூடம்,இல்லம், சங்கங்கள்,அரசியல்,சமூகப் பண்பாட்டுக் கழகங்கள் போன்ற எல்லா இடங்களுமே, இப்படிப்பட்ட அறிவினையூட்டி, குணங்களை வளர்க்கின்ற கடமைகளையே முனைப்புடன் ஆற்றுகின்றன.

தனிப்பட்ட ஒவ்வொருவரும் இத்தகைய குணங்களைப் பெறுகிறபோது,தங்களுடன் வாழ்கின்ற அண்டை அயலாருடன் ஒத்துப்போகிற பற்றுப் பாசங்களையும்