பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

253


பெருக்கிக் கொள்கிற வகையில்தான் கல்வி முனைப்போடு முயற்சி செய்கிறது. அத்துடன் சமூக வாழ்க்கையை சிறப்பாக மேற்கொள்ள, அதற்கான சமூகத்திறன்களை பரவலாகக் கற்றுக் கொடுக்கவும், கல்வி பாடுபடுகிறது.

இப்படியாகத்தான், நல்ல மனிதக் குணங்களும் நல்ல பழக்க வழக்கங்களும் சமுதாயத்தில் பெருகி வளரக்கூடிய வழிவகைகளைக் கல்வி செய்து தருகிறது. அதாவது சமூகத் திறன்கள் என்பவை, ஒருவரை நல்ல குடிமகனாக வாழ வழிவகை செய்கிறது என்பதே கல்வியின் இனிய இலட்சியமாகும்.

கற்பிப்பவரின் தகுதி

சமூகநற்குணங்களை வளர்க்க முற்படும்ஆசிரியரும், தான் போதிக்கின்ற நற்குணங்களை, தானும் உடையவராக, பின்பற்றுபவராகவும் இருக்க வேண்டும். அவர் அத்தகையவராக இருந்தால்தான், கற்றுக் கொள்வோரும் விரும்பி அக்குணங்களை ஏற்று, வளர்த்துக் கொள்பவராக இருப்பார்கள், இருக்க முடியும்.

ஆசிரியர் நடப்பது ஒருவழி, அவர் கற்பிக்கும் நல்வழி வேறுவழி என்று இருந்தால், கற்பிப்பது கேலிக்கூத்தாக அமைந்துவிடும். விளையாட்டு நற்குணங்கள் இல்லாத ஒரு உடற்கல்வி ஆசிரியர், எவ்வளவுதான் விளையாட்டுக் குணங்கள், பெருந்தன்மை போன்றவற்றைப் போதித்தாலும், அவரது போதனை எடுபடாமல் போகும். பின்பற்றும் மாணவர்களிடமும் அவப்பெயர் நேரிடும். ஆசிரியரே சிறந்த வழி காட்டியாக அமைவது மிக மிக அவசியமான ஒன்றாகும்.

நாகரிகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்ற காலம் இது அதற்கு சமூக ஒற்றுமை மிகவும் வேண்டற் பாலது.