பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

உடற்கல்வி என்றால் என்ன?


கின்றன. அந்தப் போட்டி மனப்பாங்கானது தெளிவாகக் கற்பதில் உந்துதல்களாக இருந்து, முன்னேற்றத்தை விளைவிக்கும் மேன்மை மிகு காரியங்களாக விளங்குகின்றன. வீரியத்தோடு வெளிப்படுகின்றன.

2.விளையாட்டுத் துறைகயில் போட்டியிடுகிறவர்கள் முதலில் தங்களுக்குரிய திறமைகள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அடுத்தவர்களுடன் போட்டியிடும்போது, அவர்கள் திறமைகளுடன் தனது திறமைகள் எவ்வளவு, எப்படி இருக்கின்றன என்பதையும் கண்டுகொள்ள முடிகிறது. போட்டி நேரத்தின் போது, தமது திறமைகள் மற்றவர்களிடையே பளிச்சென வெளிச்சமிடுகிறபோது, மனதுக்கு மகிழ்ச்சியும் பெறமுடிகிறது.

3.போட்டிகளில் பங்கேற்கிறவர்கள் ஒர் அணியாகக் கூடுவது மட்டுமல்ல, ஒர் அமைப்பின் அல்லது நிறுவனத்தின் சார்பாகப் போட்டியிடச் செய்வது அவர்களுக்கு கெளரவமான காரியமாகும். மற்றவர்களிடையே மதிப்பும் மரியாதையும் பெறத்தக்க வகையில் வெளிப்படுகின்ற மேன்மையாகவும் விளங்குகிறது.

4. போட்டிகளில் பங்கேற்கிற அனைவரும் விதிகளுக்குப் பணிகிறார்கள். கீழ்ப்படிந்துள்ளவர்களாக, கட்டுப்பாடுள்ளவர்களாக, எதிர்ப்பாரையும் வெறுக்காமல், வேகத்திலும் விவேகம் காட்டுபவர்களாக கலந்து கொள்கிற, பெருந்தன்மை நிறைந்த பண்பாடுகளை, போட்டிகள் ஏற்படுத்தித் தருகின்றன.

5.போட்டிகளில் பங்கு பெறுவோர்கள் சுய சோதனைக்குள்ளாகின்ற நேரங்கள் நிறையவே ஏற்படும். அவர்கள் ஆற்றலுக்குத் தேர்வு மட்டுமல்ல.