பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

265




4. விளையாட்டுக்கள் தேக சக்தியை செலவழிப்பது மட்டுமல்ல.சக்தியை சேகரிக்கவும், வளர்க்கவும் உதவுகின்றன. விளையாட்டுக்கள் மூலமாக நவீன காலக் கல்வி முறையும் கற்பிக்கப்படுகின்றன.

விளையாட்டுக்கள் இடம் பெறுகின்றன. ஆடுகளங்கள், ஓடுகளங்கள், ஜிம்னேஷியங்கள், நீச்சல் குளங்கள், போன்ற இடங்கள் இத்தகைய சமுதாய கல்வி அனுபவங்கள் வளர்ந்துவிட உதவுகின்றன. உற்சாகம் ஊட்டுகின்றன. குழந்தைகள் கூடி விளையாட, கலந்துறவாட இடம் தருகின்றன. சிறந்த குடிமக்களாகத் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கின்றன.

5. சமுதாயப் பணிகளும், குணநலன்களும் மக்களுக்குப் போதிப்பதால் மட்டும் வந்து விடாது. நீண்டநாளைக்குச் சொல்லிக் கொடுப்பதால், மட்டுமே வந்து விடாது. அவைகள் செயல்படுகிற போது தான் வரும். வளரும்.

விளையாட்டுக்கள் சமூகப் பண்புகளைப் பார்த்துச் செய்கிற (imitaion), பாவனை செய்வதன் மூலம் கற்றுக் கொள்ள உதவுகின்றன.

சமூகப் பண்புகளாக விளங்கும் நேர்மை, நியாயமான ஆட்டம், விதிகளை மதித்தல், மற்றவர்களை மதித்தல் போன்றவற்றை விளையாட்டில் உணர்ந்து செயல்படுகிறபோதே, வளர்ச்சி பெற்று விடுகிறது என்பதை நாம் இங்கே நினைவு கூர்வோம்.

6. ஒவ்வொரு குழந்தைக்கும் அதிகமான சமூக அனுபவங்கள் ஏற்படுகிறபோது தான், தங்களது தோரணையில் கம்பீரம் பெற முடிகிறது. அந்த அளவுக்கு உடற்கல்வி தரும் அனுபவங்கள் அவர்