பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11. தலைமை ஏற்கும் தகுதிகள்
LEADERSHIP

தலைமையும் தகுதியும்

மனிதர்கள் எல்லோரும் தோற்றத்திலோ, தொடர்பான எண்ணத்திலோ, தொடங்கி முடிக்கும் செயல்களிலோ ஒன்று போல் இருப்பதில்லை. ஆளுக்கு ஆள் வேறுபாடு இருந்தாலும், அவர்கள் ஒன்றுகூடி வாழ வேண்டிய அவசியமும் கட்டாயமும், ஆதி நாட்களிலிருந்தே ஆரம்பித்துவிட்டன.

இரண்டு கடிகாரங்கள் ஒத்த நேரத்தைக் காட்டுவது இல்லை என்பார்கள்.அதுபோலவே இரண்டு மனிதர்கள் ஒன்று போல் சிந்திப்பதில்லை. சொல்வதில்லை.

ஒரு சில மனிதர்கள் மற்ற மனிதர்களை விட ஆற்றலில், ஆண்மையில், ஆளுமையில், ஆஜானுபாகுவான உடலமைப்பில் எடுப்பாக இருப்பார்கள். இந்த மாற்றங்களும் தோற்றங்களும் இயற்கையாகவே அமைந்திருப்பவைதான். இவ்வாறான சிறப்புத் திறன் உள்ளவர்களே. மற்றவர்களுக்கு தலைமை தாங்குகின்ற வாய்ப்புக்