பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

279


சாதிக்க முடியாது என்கிற காரியங்களையும் சாதிக்கும் போது தான், அந்த உண்மையான மகிழ்ச்சி உண்டாகிறது.

அப்படிப்பட்ட உண்மையான மகிழ்ச்சியை தனக்கும் உண்டாக்கிக் கொண்டு, பின்பற்றும் தொண்டர்களுக்கும் பெருமளவில் உண்டாக்கிவைக்கிற தலைவரே, சிறந்த தலைவராகிறார். அவரிடம் இருக்கும் வரையில், எந்த ஆபத்தும் தமக்கு அணுகாது என்ற நம்பிக்கையில், எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற ஆனந்தத்தில், தலைவரின் சார்புள்ள மக்கள் மகிழ்வார்கள்.அதுவே நல்ல தலைவருக்குரிய பொற்குணங்களாகும்.

உடற்கல்வித் தலைவர்களுக்குரிய தகுதிகள்

1. பொதுக் கல்வித் தகுதி.

2. உடற்கல்வியில் பெறுகிற சிறப்பு தொழில் கல்வித் தகுதி. (உடற்கல்வி இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம், உயர்நிலை உடற்கல்விப்பட்டம் போன்றவை)

3. விளையாட்டுக்களில் உள்ள திறன்களில் தேர்ச்சி உடல்தோரணை, ஆளுமை, ஒழுக்கப் பண்புகளில் உயர்ந்தவராக விளங்குதல்.

பம்பாய் உடற்கல்விக் குழு ஒன்று செய்த பரிந்துரையில் உள்ள சில தகுதிகளை இங்கே பார்ப்போம்.

1. வகுப்புகளில் பயிற்றுவிக்கும் பாடங்களாவன. ஆங்கிலம், கணிதம், உடற்கூறு நூல், உடலியல் நூல், உடற்கல்வியின் கொள்கைகள் என்பன பற்றி, உடற் கல்வி ஆசிரியர் உயர்நிலைப் பள்ளியில் பயிற்றுவிக்கும் ஆற்றல் பெற்றிருத்தல்.

2. மற்ற ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, மாணவர்களுக்கு எப்பொழுது, எப்படி பாடம் கற்பித்தல்,