பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

29



விளையாட்டுக்கள் (Games)

பொழுது போக்குகள் (Recreation)

உடல் திற நிலை (Physical Fitness)

தற்காப்புக் கலைகள் (self defence activities)

இனி ஒவ்வொரு சொல்லின் தனித் தன்மையையும், நுண்மையான பொருளையும் இங்கே விளக்கமாகக் காண்போம்

1. உடற்கல்வி (Physical Education)

உடற்கல்வியானது உடலை உன்னதமான முறைகளில் இயக்குகிறது.உடலின் வளர்ச்சிக்கும் கிளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வளர்க்கிறது.

தேகத்தின் திறனை மிகுதிப்படுத்துகிறது. ஒழுக்கமான பண்புகளில் ஊட்டத்தை அளித்து, உற்சாகத்துடன் கடைபிடிக்கச் செய்கிறது. சமூகத்தில் தகுதி வாய்ந்தவராக, தரம் மிகுந்தவராக, ஒத்துப் போகின்ற உரமான உள்ளம் கொண்டவராக, எந்த நிலையிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானம் காக்கும் நேரியராக உருவாக்கும் நிலைமையை உடற்கல்வி ஏற்படுத்தி, வளம் கொடுக்கிறது.

ஒரு சுதந்திர நாட்டில் பொறுப்புள்ள குடிமகனாக வாழும் வேட்கையை, வளர்த்து, சீலர்களாக வாழ உதவுகிறது. அதாவது சமத்துவம் சகோதரத்துவம், சுதந்தரத்துவம் உள்ளவராக வளர்ந்திட உடற்கல்வி உதவுகிறது.

உடற் பயிற்சி (Physical Training)

பொதுவாக, உடற்பயிற்சி என்னும் சொல், உடற் கல்விதான் என்கிற அளவில், பொது மக்களின் அபிப்