பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

உடற்கல்வி என்றால் என்ன?


பிராயமாக இருந்து வருகிறது. ஆனால், அது அப்படி அல்ல. உண்மையும் அல்ல.

உடற்பயிற்சி என்பது இராணுவத்தில் நடைபெறுகிற உடல் இயக்கமாக இருந்து வருவதாகும்.

அதாவது, மிகவும் வலிமை வாய்ந்த, கடினமான தேகத்துடன், மிகவும் கடுமையான காரியங்களைச் செய்கிற மனிதர்களை உருவாக்கும இராணுவப் பயிற்சியுடன், இந்த சொல் தொடர்பு கொண்டதாக விளங்குகிறது. இராணுவத்தில் உள்ள வீரர்களை உடலாலும் மனதாலும் வலிமையும் கடுமையும் கொண்டவர்களாக மாற்ற முயல்வதே இப்பயிற்சிகளின் தலையாய நோக்கமாகும்.

1920ம் ஆண்டுக்கு முன்னர், விஞ்ஞான முறையில் பயிற்சி பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளிகளில் இல்லை. பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு, உடற்கல்வி வகுப்புகளை நடத்துகிற பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருந்தவர்கள் இராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்று வந்த முன்னாள் இராணுவ வீரர்கள் ஆவார்கள்.

அவர்கள் தாங்கள் கற்றுத் தந்த உடற்கல்விக்கு சூட்டிய பெயர் (Drill class) இராணுவ பயிற்சி முறைகள் என்பதாகும்.

இந்த டிரில் என்ற வார்த்தை டச்சு மொழியில் உள்ள Drillen என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். இதற்குத் துளையிடு, ஊடுருவிச் செல் என்பது பொருளாகும்.

இராணுவத்தில் பணியாற்றித் திரும்பியவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் பொறுப்பில் அமர்த்தியபோது, மரத்தைத் துளையிடுவது போல, உடலைக் கடுமையான