பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

31


பயிற்சிகளால் வளைத்துத் துளைத்து, அவர்களை உடலால் பலம் நிறைந்தவர்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுத்திவிட்டு, அதை டிரில் என்று அழைத்தனர்.

ஆகவே, இராணுவ பயிற்சிகள் அடிப்படையில் செய்து வந்த பயிற்சிகளே உடற்பயிற்சி என்று அழைக்கப்பட்டது.

ஆனால், அந்தப் பயிற்சிகளில் கட்டளைக்கு ஏற்ப செய்கின்ற பயிற்சிகள். (Exercise with Commands) இசை நயலயத்தோடு செய்கின்ற பயிற்சிகள் (Rhythamic Exercises) என்று பிரிவுகள் ஏற்படுத்தி பயிற்சி தந்தனர். அந்தப் பிரிவுகள் பின்வருமாறு.

1.உடல் பதமாக்கும் பயிற்சிகள் (Conditioning Exercises)

2.வெறுங்கைப் பயிற்சிகள் (Calisthcnics)

3.இராணுவ முறைப் பயிற்சிகள் (Drills)

4. சீருடற்பயிற்சிகள் (Gymnastics)

மேற்கூறிய பயிற்சி முறைகளின் முக்கிய நோக்கமானது பயில்வோரின் உடலைப் பலமும், நிறைந்த வலிமையும் மிகுந்ததாக மாற்றி அமைத்து, செழுமையாக வாழ்ந்திடத்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், விஞ்ஞான பூர்வமான வழிகளில் உடற் கல்விமுறை அமைந்தபிறகு, உடற்பயிற்சிகளில் நுணுக்கங்கள் உண்டாகிவிடவே, உடற்பயிற்சிதான் உடற்கல்வி என்று எண்ணிய மனப்பாங்கு மக்களிடையே மறைந்து போனது.

உடற்கல்வியானது உடல் வளர்ச்சிக் கல்வியாக, மனவளர்ச்சிக் கல்வியாக, நல்லொழுக்கம் காக்கும்