பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

உடற்கல்வி என்றால் என்ன?


நன்றாக வாழ்வது. ஆனால் அந்த நலநிலை என்பது நோயில்லாத அல்லது உடல்நலிவற்ற நிலையல்ல” என்று கூறுவதன் விளக்கத்தை இன்னும் சற்று விரிவாகக் காண்போம்.

இந்த நலநிலை என்பது நன்றாக வாழ்ந்து சிறப்பாக சேவை செய்வது (Live most and serve Best). அதுவே உடல் நலத்தின் உன்னதமான குணாதிசயமாகும்.

உடல் நலமுடன் வாழ்கிற ஒருவர். தான் ஆற்றுகிற செயல்களை எல்லாம் சிறப்பாக செய்துமுடிக்கும் திறன் பெறுகிறார். அத்துடன் தன்னைச் சார்ந்திருக்கும் அனைவருக்கும், தன்னாலான உதவிகளைச் செய்து திறம்பட வாழ்ந்திட உதவுகிறார்.

‘உடல்நலம் என்பது மகிழ்ச்சியின் ஆதாரம், தாய் நாட்டிற்கு வலிமை’ என்பதாக வல்லுநர்கள் விவரிக்கின்றார்கள்.

உடல் நலம் பற்றியும், உறக்கம், ஒய்வு, நோய்களிலிருந்து விலகி வாழ்வது போன்றவற்றையும் விளக்கிக் கூறுவதையே உடல்நலக்கல்வி என்கிறார்கள்.

உடல் நலக் கல்வி என்பது உடற்கல்வியின் இன்றியமையாத ஒரு பகுதியாகவே இருக்கிறது. அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கத்தான் இருக்கிறது.

உடல் நலம் உள்ளவரே முழு மனிதராக வாழ முடியும், உடலால், மனதால், ஆத்மாவால் சிறப்பாக வாழ முடியும். உடல் நலம் இழந்தவர்கள் உண்மையிலேயே முழு மகிழ்ச்சியான வாழ்வை வாழமுடியாமல் வருந்திச் சாகின்றார்கள்.

அதனால்தான், உடல்நலமும் உடல்திறமும் ஒரு உடலுக்கு இருகரங்கள்போல, ஒரு முகத்திற்கு இரு