பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

உடற்கல்வி என்றால் என்ன?




ஆகவே, குறிக்கோளினைப் பற்றி நாம் விளங்கிக் கொள்வோம். ஒரு நோக்கம் என்பது எட்ட வேண்டிய இலக்காகும். ஒரு குறிக்கோள் என்பது விரைவாக பெற்றுக் கொள்ளக் கூடிய இலக்கின் சில பகுதியாகக் கருதப்பட்டு, பின்னர் அதிலிருந்து முடிவான இலக்குக்குத் தொடர்ந்து வழிநடத்திப் போகின்ற சந்தர்ப்பங்களை அளிப்பதாகும்.

உடற் கல்வியின் நோக்கம்

உடற்கல்வியின் நோக்கமானது, மனிதர்களது ஆளுமையில் (Personality) முழுவளர்ச்சியைக் கொடுப்பதாகும். அல்லது, ஒர் சிறந்த வாழ்வு வாழ சந்தர்ப்பங்களை வழங்குவதாகும்.

சிறந்த உடற்கல்வியாளராக விளங்கியது குவில்லியம்ஸ் என்ற மேனாட்டறிஞர். கீழ்க்கண்டவாறு தனது கருத்தைத் தெரிவிக்கிறார்.

“உடற் கல்வியின் நோக்கமானது:- மனிதர்களுக்குத் திறமை வாய்ந்த தலைவர்களையும், தேவையான வசதி மிக்க வாய்ப்புக்களையும், தனிப்பட்டவர்களுக்கும் கூடிவரும் பொதுமக்களுக்கும் உடலால் முழு வளர்ச்சியும், மனதால் உற்சாகமும் முனைப்பும், சமூகத்தில் சிறந்த வர்களாகவும் விளங்கிட வேண்டியவற்றை வழங்கிடும் சந்தர்ப்பங்களை அளித்து, அற்புதமாக வாழச்செய்கிறது.”

உடற்கல்வியின், இத்தகைய உன்னத நோக்கமானது, உலகில் தங்கு தடையின்றி நடந்தேறிடவேண்டுமென்றால் அதற்கு.

1. நன்கு கற்றுத் தேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கள், சிறப்புப் பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பெருகி வரவேண்டும். அவர்கள் தான்