பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

47


 வளர்ந்து வரும் உடற்கல்வியின் ஒப்பற்ற சேவைக் குணத்திற்கு ஈடுகொடுத்து, பெரும் பணியாற்றிட முடியும்.

2. மேற்கூறிய தலைமையாளர்கள் வளர்ந்தால் மட்டும் போதாது. உடற்கல்வியின் நோக்கத்தை நிறைவேற்றிவைக்கும் களங்களான ஆடுகளங்கள், ஓடுகளங்கள், நீச்சல்குளங்கள், விளையாட்டு உதவி சாதனங்கள், விளையாட்டுப் பொருட்கள், எல்லாம் தரமான நிலையிலும் திறமான தகுதியிலும் இருந்தாக வேண்டும்.

3. பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும், பயன்படும் இடங்களும் இருந்தால் மட்டும் போதாது. பங்கு பெறுபவர்கள் உடலாலும் மனதாலும் பயிற்சி பெற, போதிய அவகாசம் கிடைக்குமாறு செய்திட வேண்டும். பயிற்சிகளில் பங்கு பெற போதுமான நேரங்கள்; பங்கு பெறுவோரின் பக்குவமான அணுகு முறைகள், விருப்பத்துடன் கற்றுக கொள்ளும் திருப்பங்கள் எல்லாம் தான் நம்பிய நோக்கத்தை நிறைவேற்றி வைக்க உதவும.

எதிர் பார்க்கும் நோக்கங்கள் எல்லாம் உடனேயே வந்து விடாது. அதற்குக் கொஞ்சகாலம் பிடிக்கும். அதற்குள் அவசரப்பட்டு எந்த வித முடிவுக்கும் வந்துவிடக்கூடாது.

4. உடற் கல்வியின் நோக்கங்களில் ஒன்று, ஒருவரை சமுதாயத்தில் சிறந்த குடிமகனாக வாழச் செய்வது என்பது. அதனால் பயிற்சிகளில் ஈடுபடும் போதும், விளையாடும்போதும் தனித்தனியாக இயங்கச் செய்யாமல், ஒருவரோடு ஒருவர் கலந்துற வாட, கூடி விளையாடி மகிழும் வாய்ப்புக்களை நிறைய நல்கிட வேண்டும்.