பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

உடற்கல்வி என்றால் என்ன?


என்னென்ன பயன்கள், நன்மைகள் கிடைக்கும் என்பதையும் அறிந்து கொள்வோம்.

1. குறிக்கோள்களைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதால், இலக்கினை நோக்கி சரியாக முன்னேறிப் போக முடியும். பிரச்சினைகளும் இடைமறிக்கும் இன்னல்களும் எதிர் வருகிறபோது, சமாளித்து தொடர்ந்து முன்னேறும் மனச் செறிவையும் வளர்த்துவிடும்.

2. உடற்கல்வியாளர்கள் தங்கள் திட்டங்களுடன் அன்றாட கடமைகளை எதிர்பார்ப்புடன் ஆற்றுகிறபோது. மாணவர்களின் பெற்றோர்கள், பொதுநிர்வாக அலுவலர்கள் பிற விளையாட்டுச் சங்கங்கள், வணிகமுறையில் இயங்கும் விளையாட்டுப் மேலாளர்கள் இவர்களுடன் மோதுகிற சூழ்நிலைகள் ஏற்படும். ஏனென்றால், அவர்கள் உடற்கல்வியின் குறிக்கோள்களின் உண்மை நிலையை உணராமல், தாங்கள் விரும்புகிறபடியே செயல்பட வேண்டும் என்று விரும்பி வற்புறுத்துகிறபோது, அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படத்தான் நேரும்.

அப்பொழுது, நிதானமாகவும் நிலை குலைந்து போகாமலும் நேராக இலக்கு நோக்கிப் பணியாற்ற இந்த அறிவு உதவும்.

3. உடற் கல்வி குறிக்கோள்களை உண்மையாகப் புரிந்து வைத்திருக்கும்போது, குழப்ப வருகின்ற கல்வியாளர்களுக்கும், ஒன்றும்புரியாத தற்குறிகளுக்கும் புரியவைக்க ஏதுவாக இருக்கும்.

4. உடற்கல்வியின் குறிக்கோள்களைப்பற்றி, உலகத்தாருக்குத் தெளிவாக விளக்கிக் கூறாத நிலைமையே இன்னும் இருப்பதால்தான், இதன்