பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

57


II. தன்னை அறிந்து கொள்ள உதவுகிறது (Self Realisation)

1. அறிந்து கொள்ளும் மனம்:

ஒருவன் தனது சுற்றுப்புற சூழ்நிலையை இயம் தெளிவுறக் கண்டு அறிந்து கொள்ளவும்; அதற்கேற்ப தன்னை அனுசரித்துப் போகின்ற தன்மையில் நடத்திக் கொள்ளவும், தனக்குள்ள திறமையின் அளவினைத் தெரிந்து கொண்டு அதனை வைத்து சுற்றுப்புறத்தால் எழும்பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும். மேலும் தன்னை உயர்த்தி மேம்பாட்டடைவதற்கும் உடற்கல்வி உதவுகிறது.

2. உடல் நல அறிவு

மகிழ்ச்சியானது நோயற்ற நலவாழ்வினால் தான் கிடைக்கிறது. உடல் நலம் பற்றிய அறிவு இல்லாமல், ஒருவனால் நலமான உடலைக் காத்துக் கொள்ள முடியாது. உடற்கல்வியானது உடல் நலம் பற்றியே அதிகம் கற்பிக்கிறது.புத்துணர்ச்சி (Refleshment): ஒய்வெடுத்தல்(Relaxation) உல்லாசமாக பொழுது போக்குதல் (Recreation) என்னும் 3 வழிகளிலும் உடற்கல்வி உன்னதமான உடல்நல அறிவை வளர்த்து விடுகிறது.

3. வீட்டு நலம், சமூக நலம் வளர்த்தல்

நன்கு படித்தவர்கள் தங்களது உடல் நலத்தைப் பேணிக் காப்பதுடன், தங்களது இல்லம், சமுதாயத்தின் நலத்தைக் காக்கவும் சிறந்த துணையாக நிற்கிறார்கள் சமுதாய நலம் இல்லாமற் போனால், தனிப்பட்டவர்களின் நலம், எந்த விதப் பயனும் இல்லாமல் போய்விடும்.