பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

உடற்கல்வி என்றால் என்ன?


 போது, வளர்ச்சியையும் எழுச்சியையும் மனதில் கொண்டு ஏற்று, புதுமையைப் புகுத்திச் செயல்படுவது, சிறந்த எதிர் காலத்தை அமைத்துத் தரும் என்பதில் ஐயமேயில்லை.

2. விஞ்ஞானக் கொள்கை

ஒரு சில கொள்கைகள் விஞ்ஞான பூர்வமான கருத்துக்களிலிருந்து உருவாகி வருகின்றன. அப்படிப்பட்ட கருத்துககள் உண்மையானவைகள் : ஆதாரபூர்வ மானவைகள் என்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

ஏனென்றால், விஞ்ஞானக் கொள்கைகள் யாவும், ஆய்வு மூலமாகவும்,தொடரும் பரிசோதனை மூலமாகவும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுபவையாகும்.

இன்னும சில விஞ்ஞானக்கொள்கைகள் நிலையற்ற, தற்காலிகமானவை என்று இருப்பதையும் காணலாம். ஏனெனில், அவைகள் இன்னும் ஆராயப்படவேண்டும், அறிந்து கொள்ளப்பட வேண்டும் என்று அறிஞர்கள் அபிப்ராயப்படுவதால்தான்.

இயல்பியல், வேதியல், உயிரியல் போன்ற அறிவியலில் உரைக்கப்பட்ட கண்டுபிடிப்பு உண்மைகள் பல, இந்த நூற்றாண்டில் மாறிப் போயிருக்கின்றன என்ற உண்மையும் நமக்குத் தெரியும். ஆகவே, விஞ்ஞானக் கொள்கைகள் யாவும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, நாளையே அது உண்மையல்ல என்று மறுத்துரைக்கப் படுகின்ற நிலைமையும் உண்டாகும்.

ஆனால், உடற்கல்வியில் உள்ள விஞ்ஞானக் கொள்கைகள் யாவும், ‘இயக்கத்திற்குரியவன் மனிதன்’ ‘மனிதனே ஒரு இயக்கம் தான்’ என்று ஆணித்தரமாக விளக்கும் அமைப்பிலேதான் உருவாகியிருக்கின்றன.