பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

உடற்கல்வி என்றால் என்ன?




இனி, உடற்கல்விக்கான விஞ்ஞானக் கருத்துக்களை வழங்கிய பல விஞ்ஞான நூல்களைப் பற்றி விளக்கமாகக் காண்போம்.

1. உடற் கூறு நூல் (Anatomy)

உடல் அமைப்பைப் பற்றி விளக்கமாகக் கூறுவது உடற் கூறு நூல் ஆகும். இது மாணவர்களுக்கு உடல் அமைப்பைப் பற்றிய உண்மையான அறிவைக் கொடுக்கிறது. உடல் அமைப்பு, அதன் இயக்கம், எலும்பு மற்றும் தசைகள் இயக்கம் பற்றிய உண்மைகளை அறிய உதவுகிறது.

2. உடல் (உறுப்பு) இயக்க நூல் (Physiology)

உடல் உறுப்புக்களின் இயற்கையான அமைப்பு, அதன் வழியாக உயிர் இயங்கும் இயக்கம் மற்றும் உறுப்புக்களின் தனித்தன்மை, செயல்கள் பற்றி விரிவாகக் கூறும் நூலாக இது அமைந்திருக்கிறது.

தசைகளின் இயக்கம், தசைகளின் களைப்பு, இதயத்தின் பணி, அதன் அயராத உழைப்பு நாளமில்லா சுரப்பிகள், அவற்றின் இயல்புகள், சுரப்பிகளின் பயன்கள் இவற்றைத் தெளிவாகக் கூறுகிற நூலாக இந்நூல் அமைந்திருக்கிறது.

உடற்கல்வியானது உடலுக்குப் பயிற்சி தருவதில் தான் முனைப்புடன் பணியாற்றுகிறது. ஆக, இவ்விரண்டு அறிவியல்களும் உடற்கல்வியுடன் இரண்டறக் கலந்திருக்கின்றன.இணைந்து செயலாற்றுகின்றன.

“உடல் நூலும், உடலியக்க நூலும் உடல் நிமிர்ந்த தோரணை, சீரான சிறப்பியக்கச் சக்தியின் செயல் பாடுகள், தசைத்திறன்கள், அவற்றின் விசைச் சக்திகள்,