பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

81


இரத்த ஒட்டம், சுவாசம், ஜீரணம் போன்றவற்றை நன்கு விளக்கிக் கூறுகின்றன. அவற்றின் மேம்பாட்டுக்குத்தான் உடற்பயிற்சிகள் உத்வேகம் ஊட்டுகின்றன. ஆகவே உடற்கல்வியின் உன்னத கொள்கைகளின், சிறப்புபற்றி,நாம் நன்கு அறிந்து கொள்ளமுடிகிறது.

3. உயிரியல் (Biology)

உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற உயிர்வாழ் இனங்களைப்பற்றி விவரமாகக் கூறும் நூல் இது.

உயிர்கள் யாவும் பரிணாம வளர்ச்சியின் (Evolution) மூலமாகவே இத்தகைய நிலைகள் அமைந்துள்ளன என்று விளக்குவதால், இந்த நூல் உடற்கல்வியுடன் ஒத்துப் போகிறது.நிறையவே உதவுகிறது.

பரிணாம வளர்ச்சியால்தான் மனிதன் பக்குவமான தேகத்தைப் பெற்றிருக்கிறான் என்றால், அவனது எதிர்கால நல்ல வளர்ச்சியைப் பற்றியும் உடற்கல்வியாளர்கள் சிந்திக்கவேண்டும்.

ஆக, எந்தெந்த செயல்களில் மனிதரை ஈடுபடுத்தினால், நல்ல வளர்ச்சியையும், சிறந்த எதிர்கால எழுச்சியையும் பெறமுடியும் என்பதில் கவனம் கொண்டு திட்டங்களை தீட்டவேண்டும்.

ஆதிமனிதர் நடந்து, ஒடிதுள்ளித்தாண்டி எறிந்து மரம் ஏறி, நீந்தி என்பனபோன்ற செயல்களில் ஈடுபட்டுத் தான் தங்கள் உணவுகளைத் தேடிக்கொண்டனர். பாதுகாப்புடன் வாழ்ந்துகொண்டனர்.

அப்படிப்பட்ட ஆதாரமாய் அமைந்து, அடிப்படை இயக்கங்களை இன்னும் செழுமையாக்கி, மனிதர்களை சிறப்பான வாழ்வு வாழத்தான் உடற்கல்வியின் கொள்கைகள் திட்டங்களைத்தீட்டி செயல்படுத்துகின்றன.