பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

உடற்கல்வி என்றால் என்ன?



ஆனால் தத்துவ ஞானம் உள்ளவர்கள். ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கிற பொழுதே, அதனுள்ளே நுழைந்து, நிறைந்த அறிவினைப் பெற்றுக் கொள்கின்றார்கள். அவர்களது முழுமையான முயற்சியானது, காண்பவைகளிலும் பெறுகிற அனுபவங்களிலும் அதிகமான அறிவைப் பெற, புத்திசாலிகளாக மாறிக் கொள்வதேயாகும்.

சாதாரண மனிதர்கள் தமக்கென்று பெறுகிற அனுபவங்கள் மூலமாக அல்லது அறிஞர்கள் எழுதிய புத்தகங்களைப் படிப்பதன் மூலமாக அல்லது கற்றுத் தேர்ந்த ஆசிரியர்கள் கீழிருந்து கற்றுக் கொள்வதன் மூலமாக, அறிவினைப் பெறுகின்றார்கள்.

எப்படியிருந்தாலும் தத்துவவாதிகளும் சாதாரண மனிதர்களும், அவரவர் வழியில் அறிவினை விருத்தி செய்து கொள்ள முயற்சி செய்கின்றனர். இதுதான் உலகின் உண்மையான தன்மையாகும்.

ஆனால் ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் முன்னேற விரும்புகிற எவனும், தனது எதிர்கால இலட்சியம் அல்லது குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளவும் நிறைவேற்றிக் கொள்ளவும், தத்துவார்த்த முறையிலே தான் சிந்தனை செய்கிறான்.

எந்த மனிதனும் புத்திசாலித்தனமாக சிந்திக்கிறான் சமுதாயத்தில் அறிவார்ந்த முறையில் அணுகி வெற்றிகரமாக வாழ முயல்கிறான் என்றால், அவன் வாழ்க்கைத் தத்துவவாதியாக விளங்குகிறான் என்பதேயாகும்.

எனவே, தத்துவம் என்பது கற்றலின் ஒரு பிரிவாக அதாவது ஒரு கிளையாகவே உள்ளது என்று கூறலாம், அத்தகைய தத்துவ அறிவானது ஆராய்கிறது. கண்டு