பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு பல மன்றங்கள், பள்ளி, கல்லூரிகள், திருக்கோயில் விழாக்கள் முதலியவற்றில் பல பொருள்களைப் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றினர். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், தமிழ்ப் பொழில், தமிழ்ப் பாவை போன்ற இதழ்கட்கும்,பலவகை மலர்கட்கும் கட்டுரைகள் வரைந்துள்ளனர். சிலர் நூல்களை எழுதும் திறன்மிக்கவராயினும், மேடைகளில் பேசும் திறமையற்றவர்களாகக் காணப் பெறுகின்றனர். ஆனால், நம் ஒளவைப் புலவரவர்களோ நூலெழுதும் ஆற்றலோடு கேட்டார்ப் பிணிக்குந் தகையவராய்ப் பேசுந்திறலாளர் ஆவர். மாண்பமைந்த இப்புலவர் பெருமானுக்கு அறிவறிந்த ஆண் மக்கள் ஐவரும் பெண்மக்கள் நால்வரும் உளர். மூத்த திருமகனார் ஒளவை நடராசனார். தந்தையை ஒப்பர் மக்கள் என்னும் முதுமொழிக்கு இலக்கியமாக விளங்குகிறார். எம்.ஏ., எம்.லிட் பி.எச்டி, பட்டங்கள் பெற்று உயர்திரு வள்ளல் நாமகாலிங்கம் அவர்களின் இராமலிங்கர் பணிமன்றில் தொண்டு புரிந்து வருகின்றார். பட்டி மன்றங்கள் இவரால் கிளர்ச்சியும் பெருமையும் அடைகின்றன. எனவே, இவர், "பட்டிமன்ற மன்னர் என அழைக்கப் பெறுகின்றனர். அவர் தம் தந்தையாரைப் போலவே ஒளவை நடராசன் என்றே கையெழுத்திடுகின்றனர். ஞானச்சம்பந்தனும், இளயோரான மெய்கண்டானும், நெடுமாறனும் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர். . புலவரவர்களின் மகளிர் நால்வர்க்குக் கணவன்மார் கல்லூரிப் பட்டம் பெற்ற தகுதி மிக்கவராவர். கடைசித் திருமகள் செல்வி தமிழரசியாரின் கணவனார் திரு. இரா. குமரவேல் அவர்கள் நாடகக் கலை பற்றி ஆய்வுரை எழுதி டாக்டர் பட்டம் பெற்றுள்ள பேராசிரியர். . இவர்களிடம் தமிழ் பயின்று புலமை பெற்ற செந்தமிழ்த் திருவாட்டியார் இராதா தியாகராசன் அவர்கள் இவர்க்கு உரை வேந்தர் என்ற சிறப்புப் பெயரும், தூத்துக்குடி சைவசித்தாந்த சபையார் ‘சித்தாந்த கலாநிதி (சித்தாந்தக் கலைக்கடல்) என்னும் பட்டமும் வழங்கிப் பாராட்டினர். இவரை 'நாவேந்தர் எனவும் அழைக்க என் மனம் அவாவுகின்றது.