பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்ப்பொலிவேடு! - 17 சிலரை யண்ம யிலக்கிய விலக்கணஞ் சிறிது பயின்றுளேன்; செம்மல் நின்றிறங்கேட் டரியவை யறிவானார்வமுற் றடைந்தனென் குலனருள் வாய்ந்த குரவ! எற் கிரங்கி யொல்காப் பெருமைத் தொல்காப்பியமொ டேனை யைவகை யிலக்கண நூல்களும் பல்காப் பியங்களும் பரிந்தனை பயிற்றிப் பல்கலைக் கழகம் நல்கும் 'வித்துவான்' பீடுறு பட்டம் பெறவெற் கருண்மதி அருளுவை யாயின் பொருளிலாச் சிறியேன் காலந் தன்னிற் சீல! நீ புரியும் ஞாலந் தன்னினுஞ் சாலப் பெரிதாம் நன்றி யிதனை யென்று மறவாதுள்ளி மகிழ்ந்து வாழ்த்துவனே என்னும் பாடலை இயற்றி எடுத்துக்கொண்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை பிள்ளையவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர் வெளித் திண்ணையில் புத்தகக் குவியல்களுக்கிடையே சிறிய சாய்வு மேசையின் முன் அமர்ந்து ஏதோ குறிப்பெடுப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தார். நான் வணக்கம் கூறி முன்னே நின்றேன். அவர் நிமிர்ந்து பார்த்து, இருக்கப் பணித்து, என்னைப் பற்றி உசாவலுற்றார். நான் சுருக்கமாக என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு எடுத்துச் சென்றிருந்த பாடல் தாளை அவரிடம் கொடுத்தேன். அவர் பாடலை ஊன்றிப் படித்துப் பார்த்துவிட்டு, இதுயார் எழுதித் தந்தது?’ என்று கேட்டார். 'நான் இயற்றியதே' என்றேன். பழகிப் பண்பட்ட பண்டிதர் பாடலாக இருப்பதால் கேட்டேன். இதில் என்னைப் பலவாறு சிறப்பித் திருக்கிறீர்களே, அச்சிறப்புக்களை என்னிடம் எவ்வாறு கண்டீர்கள்?’ என்றார். நான் அவர் அறியாமலே அவரைப் பல நாட்கள் ஆராய்ந்ததையும், அவ்வாராய்ச்சியில் கண்டவற்றுள் சிலவே அவை என்பதையும் எடுத்துரைத்தேன். அதனை அடுத்து 'நீங்கள் யார் யாரிடம் என்னென்ன நூல் படித்திருக்கிறீர்? என்று வினவினார். நான் பாடங்கேட்ட புலவர்களையும், அவர்களுள் ஒவ்வொருவரிடமும் படித்து முடித்த நூல்களையும் வரிசையாகக் கூறினேன். உங்கள் தகுதியையும், உணர்ச்சியையும், வேட்கை விருப்பத்தையும் இப்பாடலிலிருந்தே உணர்ந்து கொண்டேன். உங்களுக்குப் பாடம் சொல்லுவதில் மகிழ்ச்சியே. நல்ல நாள் பார்த்துக் கொண்டு வாருங்கள் என்றார், நான் நாள் பார்த்துக் கொண்டே வந்துள்ளேன். இன்று நல்ல நாளே என்றேன். அவர் அப்படியானால் இன்றே தொடங்கிவிடுவோம்’ என்று கூறி, ஒரு தாளில் சில பாடல்களை . و2 - -2