பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு மாணவர்கள் அதனை விரும்பிக் கேட்டுத் தெளிந்து மகிழச் செய்யும், பிள்ளையிடம் பயின்ற மாணவர்கள் பிற பாடங்களினும் இலக்கணத்திடமே மிக்க ஆர்வம் காட்டியதை நான் கண்டு வியந்திருக்கிறேன். உரைநடைப் பாடம் கற்பிப்பதிலும் அவர்தனி முறையைக் கையாண்டார். பாடத்தின் மையக் கருத்தைக் குறித்துக்காட்டி, ஒவ்வொரு பத்தியிலும் விளக்கப்பட்டுள்ள அதன் கூறுகளை வகைபட விரித்துரைத்து, முடிவில் அவற்றை நிரல்படத் தொகுத்துக் கூறி, மாணவர்கள் உணர்ந்து உளங்கொள்ள வேண்டிய சிறப்புச் செய்திகளை நினைவுறுத்தி முடிப்பார். இதனால் மாணவர்கள் கேட்ட பாடத்தில் தெளிவும் மன நிறைவும் பெறலாயினர். பல்கலைக் கழகத் தேர்வு குறித்துப் பிள்ளையவர்களிடம் பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் பாடம் கேட்டுப் பயன்கொண்டவர் பலர். அவர்களுள் முதல்வனாகும் பேறு எளியேற்கு வாய்த்த வாழ்வாகும்.பேரிலக்கிய இலக்கணங்களைப் பாடம் செல்லுவதில் பிள்ளையவர்கள் உவகையும் உற்சாகமும் உடையவர் தாம் பலகால் பயின்று அரிதில் ஆய்ந்து கண்ட அரும்பொருள் நுட்பங்களை, தம்மை அடுத்த மாணவர்கள் வருத்தமின்றி அறிந்து பயனடையுமாறு பரிந்து வழங்கும் வள்ளன்மை வாய்ந்தவர். அவர் மாணவர்களை நுனிப்புல் மேயவிடாமல், நூற்பொருளை நுனித்து ஆயவும், ஆய்ந்து அறிந்தவற்றை அஞ்சாமல் பிறர்முன் எடுத்துரைக்கவும், பயிற்சியும் துணிவும் பெறச் செய்வார். அவர் இன்ன இடத்தில் இன்ன நேரத்தில்தான் பாடம் சொல்லுவது என்னும் வரையறை வைத்துக் கொண்டதில்லை. மாலையில் உலாவச் செல்லும் பொழுதும், சொற்பொழிவாற்ற அயலூர்களுக்கு வண்டிப் பயணம் செய்யும்பொழுதும், உடன் தொடரும் மாணவர்கட்கு உரிய இலக்கிய இலக்கணப் பாடப்பகுதிகளில் உள்ள அரியக் கருத்துக்களை அளவளாவும் முறையிலேயே எளிதில் உணருமாறு எடுத்துக்காட்டிச் செல்வது அவர் வழக்கம். மாணவர்களின் தகுதியும் தரமும் தெரிந்து, அவர்கள் மனம் கொள்ளுமாறு பாடம் சொல்வதில் பிள்ளையவர்கள் தனித்திறமை வாய்ந்தவர். ஒரு நூலை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள பாடல்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகப் படித்துப் பதம்பதமாகப் பொருள் கூறும் வழக்கம் பிள்ளையவர்களிடம் இல்லை. முதலில் எடுத்துக் கொண்ட நூல் எந்த வகையைச் சார்ந்ததென்பதை எடுத்துக்காட்டி, அதனை அணுகும் முறை, பயிலும் விதம், பொருள் காணும் நெறி, ஆயுள் அடைவு, நயம் காணும் திறம் ஆகியவற்றை விளக்குவார். பின்னர்