பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு என்றேன். தேர்வு பெறவில்லையா? யார் சொன்னார்?’ என்று கூறியவாறே உள்ளே சென்று இந்து பத்திரிகையை எடுத்து வந்து முதல் வகுப்பில் தேறினவர்களின் வரிசையில் இரண்டாவதாக இடம் பெற்றிருந்த என் பதிவெண்ணைச் சுட்டிக்காட்டி, 'இது உங்கள் எண்தானே? மறந்து விட்டீர்களா? என்றார். நான் வியப்பினால் விம்மிதமுற்றேனெனினும், தவற்றுக்கு நாணி னேனாய், நான் மூன்றாம் வகுப்பையே எதிர்பார்த்தேன், அதனால் பிற வகுப்புக்களின் தேர்வு வரிசைகளைக் கவனிக்கவில்லை. என்றேன். அவர் 'முதல் வகுப்பில் தேறியிருப்பது மட்டும் அன்று மாநிலத்தில் இரண்டாவது இட்ம் பெற்றிருக்கிறீர்கள். இது மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்று கூறி, கற்கண்டு வாங்கிவரச் செய்து உடனிருந்த அன்பர்களுக்கு வழங்கினார். பிள்ளையவர்கள் மாணவர்களிடம் கொண்டிருந்த அன்புக்கும், அவர்கள் தேர்ச்சியிலும் உயர்விலும் அவருக்கு இருந்த அக்கறைக்கும் இந்நிகழ்ச்சி ஒன்றே சிறந்த சான்றாகும் அன்றோ? - பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டு உயர்நிலை எய்தியோர் பலர். அவர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் முன்பு தமிழ்நாடு சட்டமன்றத் தலைவராக இருந்த புலவர் கோவிந்தன் ஆவார். புலவர் கோவிந்தன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றுவந்த நாளிலிருந்தே பிள்ளையவர்களின் அன்புக்குரிய அருமை மாணவராக அமைந்தார். பிள்ளைவர்களிடம் தனித்தமிழ் பயின்ற மற்ற மாணவர்களும் சிறப்புறத் தேறிப். பட்டம் பெற்று உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மதிப்போடு பணியாற்றி வருகின்றனர். பிள்ளையவர்களின் மாணவர்கள் அனைவரிடத்தும் அவருக்குரிய தனி முத்திரை யைக் காணலாம். அவர்கட்குப் புலவருலகில் மதிப்பு உண்டு. இவ்வாறு தம் உழைப்பினாலும் தாம் உயர்ந்தோடு தம்மை அடுத்தோர் பலரும் உயர்ந்து உய்ய உதவி வந்த ஒப்புரவாளராகிய பிள்ளையவர்கள் மறைந்தது பெரும் அவலம் தருகிறது. தமக்கென வாழாது தமிழே உயிர்ப்பாக, உணவாக, உரமாகக் கொண்டு தமிழுக்காகவே வாழ்ந்த அவர் திருப்புகழ் வளமை குன்றாத கன்னித் தமிழே போல இன்னும் பல்லாண்டுகள் மன்னுதல் உறுதி. - “கற்றவர்தாம் கண்ணிர்க் கடல்மூழ்கச் சாய்ந்துதமிழ் உற்றகடல் மூழ்கி ஒளிந்ததே - பெற்ற நிலம் எங்கும் ஒளிசெய்திரந்ததுரை சாமியெனும் பொங்கு தமிழ்ச்சுடரிப் போது”