பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்ப்பொலிவேடு! 43 “யாமும் எம் சுற்றமும் பரவுதும், ஏம வைகல் பெறுகயாம் எனவே” என்றும் வேண்டுகின்றான். இங்ங்ணம், சங்ககாலத் தமிழ்மகன், தன் வாழ்க்கையைத் தனக்கேயன்றிப் பிறர்க்கும் தன் நாட்டின் நலத்துக்கும் எனக் கருதிச் செலுத்தி, ஆண்டவன் வழிபாட்டை மறவாது, மேற்கொண்டு, அவ்வழிபாட்டிலும் தன் வாழ்வின் குறிக்கோள் கை கூடுதற்கு ஆக்க்மாகும் அருள், அன்பு, அறம் என்ற மூன்றுமே விரும்பியிருந்த நிலையை, இற்றைநாளில் மக்கள் அறிந்து நலம் பெறுவாராக! வரலாற்றுச் சிறப்புடைய மாட்சிபெற்றும், கடியநடை வாய்ந்து மற்றிங் கரிதாற்ற மாணவரை அலைக்கழிக்கும் பதிற்றுப்பத்து அருமை நூலுக்கு உரையாற்ற வகுத்தளித்தோய்! உயர்புறநா னுாறுமுதல் உறும் நூல் கட்கும் நிரலாற்றின் விளக்கங்கள் நிகழ்த்திநின்றாய்! நின்தொண்டு நிகழ்த்தற் காமோ? ஒருசிலரே அறிஞர்களுள் உயர்ந்தசைவ சித்தாந்தத் துறுநுட் பங்கள் கரிசறக்கற் றினிதுணர்ந்த கல்வியாளர் இஞ்ஞான்று காண நிற்பார் மருவிஅவர் குழுவிலொன்றி மாட்சிமிக வயங்குகின்றாய்! மகிழ்ந்து நின்னைப் - பெரிதுமிகப் பாராட்டிப் பேணிமிகப் போற்றுகின்றேம்! பிறிதென் சொல்வேம்? 4 * - ந. ரா. முருகவேள்