பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



ஒளவை துரைசாமிப்பிள்ளை நினைவலைகள்



தாமரைச் செல்வர் திரு. வ. சுப்பையா பிள்ளை
(சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சித் தலைவர்)

1949-ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித்துறை விரிவுரையாளர் சித்தாந்த கலாநிதி ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் எழுதிய "தெய்வப்புலவர் திருவள்ளுவர்” என்ற ஆராய்ச்சி நூல் கழக வழி வெளியிடப் பெற்றது. திருக்குறள் முப்பாலுக்கும் உரைவேந்தரவர்கள் மிகு விரிவான உரை எழுதவேண்டுமென்ற அவா எனக்கு உண்டு. நாகை. சொ. தண்டபாணி பிள்ளையவர்கள் அறத்துப்பாலுக்கு மட்டும் விரிவுரை எழுதினார்கள். அதனைப் போற்றாதார் இல்லை. பொருள், இன்பங்கட்கு உரை எழுதாத நிலையில் கூற்றுவன் அவர்கள் ஆருயிரைக் கவர்ந்தனன். 'திருக்குறள் அறம்-நாகை. தண்டபாணி விருத்தியரை' எனப் பாராட்டப் பெறுகின்றது. அதையொத்த விரிவுரை மற்ற இரண்டு பால்கட்கும் எழுதப் பெறுதல் வேண்டுமென்று திருக்குறள் அன்பர்கள் விரும்புகிறபடி எழுதக்கூடிய தகுதியுடையவர், பழந்தமிழ் இலக்கண, இலக்கியங்கள், சைவசமய இலக்கியங்கள் பலவற்றையும் ஐயமறத் தெளிவுறக் கற்ற நம் ஒளவையவர்களே ஆவார். - 1939-ஆம் ஆண்டில் பெரும் பேராசிரியர் ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் வடார்க்காடு மாவட்டம் போளூரில், மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார். அம்மாவட்டக் கல்வியதிகாரியாகவிருந்த உயர்திரு. சச்சிதானந்தம் பிள்ளையவர்கள் ஒருமுறை கழகத்திற்கு வந்திருந்தபோது ‘சித்தாந்தச் செந்நெறிப் புலமையும் செந்தமிழ் இலக்கண இலக்கியப் புலமையும் மிக்க தமிழாசிரியர் ஒருவர் போளூரில் இருக்கிறார். அவர் நாவலர் வேங்கடாசாமி நாட்டாரவர்களிடமும், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம்